Random Posts

Header Ads

விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! ரூ .1.60 லட்சம் இலவச கடன்! 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி!!

 


விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! ரூ .1.60 லட்சம் இலவச கடன்! 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி!!


கால்நடை கடன் அட்டை


பசு கிசான் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மோடி அரசின் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தைப் போன்றது. இதில், ரூ .1.60 லட்சம் வரையிலான தொகையை பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் வழங்க வேண்டியதில்லை.



நீங்களும் ஒரு விவசாயியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். ஏனென்றால், பசு கிசான் கடன் அட்டை திட்டத்தின் அடிப்படையில், மாடு, எருமை, செம்மறி, ஆடு மற்றும் கோழி வளர்ப்புக்காக விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ .3 லட்சம் வழங்கப்படும்.


உத்தரவாதம் இல்லாத கடன்


இதில், ரூ .1.60 லட்சம் வரையிலான தொகையை பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டியதில்லை. பசு கிசான் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மோடி அரசின் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது.


ஹரியானா விவசாய அமைச்சர் ஜேபி தலால், நிலம் இல்லாத 56,000 விவசாயிகளுக்கு இந்த அட்டையின் பலன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கிசான் கிரெடிட் கார்டின் (கேசிசி) வரிசையில், இந்த கார்டில் வாங்கிய கடனுக்கு 4 சதவிகித வட்டி மட்டுமே வசூலிக்கபட்டு வருகிறது.



மாடு, எருமைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?


1. பசுவுக்கு ரூ. 40,783 வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


2. எருமைக்கு ரூ.60,249 கிடைக்கும். இது ஒரு எருமை மாட்டுக்கு வழங்கப்படும்.


 3. ஆடுகளுக்கு ரூ. 4063 வழங்கப்படும்.


 4. முட்டையிடும் கோழிக்கு ரூ. 720 கடன் வழங்கப்படும்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


வட்டி எவ்வளவு இருக்கும்


1. கடன்கள் பொதுவாக வங்கிகளால் 7 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கும்.


2. பசு கிசான் கடன் அட்டையின் கீழ், கால்நடை உரிமையாளர்கள் 4 சதவீத வட்டியை மட்டுமே செலுத்த வேண்டும்.


3. மத்திய அரசிடமிருந்து 3 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


4. கடன் தொகை அதிகபட்சம் ரூ .3 லட்சம் வரை கிடைக்கும்.


பசு கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மாநிலத்தின் ஆர்வமுள்ள பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பசு கிரெடிட் கார்டைப் பெற விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க இப்போது நீங்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் வங்கிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.


விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் KYC முடிக்க வேண்டும். KYC க்கு, விவசாயிகள் ஆதார் அட்டை, PAN அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வழங்க வேண்டும்.


வங்கியிலிருந்து KYC பெற்று, கால்நடை கடன் அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சரிபார்த்த பிறகு, நீங்கள் 1 மாதத்திற்குள் கால்நடை கடன் அட்டையைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க....


அதிர்ச்சி தகவல்! PM Kisan நிதி உதவி பெற்ற 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள்...!!

ஒரு ஹெக்டேரிலிருந்து ரூ. 25 லட்சம்!! அரசாங்க மானியத்துடன் இஞ்சி விவசாயம்!!

காரீப் பருவ சாகுபடி- புதியதாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

Post a Comment

0 Comments