காரீப் பருவ சாகுபடி- புதியதாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு! பயிர் காப்பீடு செய்ய உகந்த தருணம் இது-வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு!
மாவட்ட அழைப்பு
மதுரை
மாவட்ட விவசாயிகள், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, சோளம், கம்பு ஆகியப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பயிர்
காப்பீட்டுத் திட்டம்
திருந்திய
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு ஆண்டு காரீப் பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ்
மதுரை மாவட்டத்தில் பிர்க்கா அளவில் நெல், பாசிப்பயறு, உளுந்து தவிர பிற பயிர்களான
மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, சோளம் மற்றும் கம்பு ஆகிய பயிர் களுக்கு
பயிர் காப்பீடு செய்துகொள்ள வழிவகை உள்ளது.
காப்பீடு செய்ய
தேவைப்படும் தகுதி
அறிவிக்கை
செய்யப்பட்ட பிர்காக்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிடும் நில உரிமையாளர், குத்தகை
விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
பயிர்க்கடன்
பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில்
கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து
விவசாயிகளுக்கும் ஒரே பிரீமியத்தொகை
கடன்
பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு
ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை, பிரீமியத்தொகை மற்றும் அதற்கான மானியத்தொகை கிடைக்கும்.
மேலும்,
தங்கள் அருகில் உள்ள பொது சேவை
மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகள் செய்யலாம்.
அனைத்து
விவசாயிகளுக்கும் ஒரே விதமான பயிர்
காப்பீட்டுத் தொகை, பிரீமியத்தொகை தான். அனைத்து விவசாயிகளுக்கும் அதற்கான மானியத் தொகை கிடைக்கும்.
காப்பீடு செய்வது எப்படி?
மேலும்,
விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அருகில் உள்ள
பொது சேவை மையங்கள், தேசிய
வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
காப்பீடு செய்ய
தேவைப்படும் ஆவணங்கள்
1. அடங்கல்
பதிவு
2. வங்கி
கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்
3. ஆதார்
அட்டை நகல்
4. விவசாயிகள்
தாங்கள் பயிர் சாகுபடி செய்ததை கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலில் பதிவு செய்யப்பட்டதை உறுதிப் படுத்தி கொள்ளவும்.
5. முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வழங்கும் அசல் அடங்கல்.
6. ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க
வேண்டும்.
பயிர்களுக்கான
பிரீமியம் தொகை எவ்வளவு
பயிர்
காப்பீடு செய்ய பிரிமியத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.495/-, துவரைக்கு ரூ.341.90/-, நிலக்கடலைக்கு ரூ.475/-, பருத்திக்கு ரூ.400.87/-, சோளத்திற்கு ரூ.243/-, கம்பு பயிருக்கு ரூ.251/- செலுத்த வேண்டும்.
எனவே
விவசாயிகள் அனைவரும் மேற்கூறியப் பயிர்களுக்கு வரும் 31க்குள் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் வெளியீடு
எஸ்.அனிஷ்சேகர்
மதுரை
மாவட்ட ஆட்சியர்.
மேலும் படிக்க....
ஆடிப்பட்டத்தில் எந்தெந்த நோய்கள் பயிர்களை தாக்கும்? பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?
PM கிசான்: திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார்? நன்மைகளைப் பெற தேவையான ஆவணங்கள் என்ன?
சிறந்த டிராக்டர்கள் வெறும் ரூ. 5 லட்சம்!! விவசாயிகளுக்கு ஏற்ற டாப் 10 டிராக்டர்கள்!! முழு விவரம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...