விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 ஒதுக்கீடு!! விவசாயத்திற்கு பாலித்தீன் குழாய்கள் மூலம் நீர் பாய்ச்ச 90% மானியம்!
பட்ஜெட் உரையில்
முதல்வர் ரங்கசாமி
நீர்சேமிப்பிற்காக,
அடர்த்திக் குறைந்த பாலித்தீன் குழாய்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முன்வரும்
விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
விவசாயிகளுக்கு
ஏக்கருக்கு ரூ.5,000 ஒதுக்கீடு
வேளாண் மற்றும்
விவசாயிகள் துறைக்கு நடப்பாண்டு 124.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து
வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு
நெல் விதைகள் ஒரு கிலோ 10 ரூபாய், அட்டவணை இனத்தவருக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.
உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை பொது பிரிவினருக்கு
75 சதவீத மானியத்திலும், அட்டவணை இனத்தவருக்கு 100 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
வணிக ரீதியிலான
திட்டம் 50 சதவீத மானியத்தில்
மாஹியில் காய்கறி
உற்பத்தி வினியோகத்திற்கு இயக்க வணிக ரீதியிலான திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின்
வருமானத்தைப் பெருக்க, சாகுபடிக்கு தேவையான உபகரங்களான சில்பாலின், தார்பாய், கைத்தெளிப்பான்,
விசைத்தெளிப்பான், அசோலா வளர்ப்பு பைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.
ஆடு, மாடு, கோழி தீவனத்திற்கான அசோலா உற்பத்தியை அதிகரித்திட, சில்பாலின் அசோலா வளர்ப்பு
பைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
தொழில்நுட்ப
மையம் அமைக்கப்படும்
தேசிய வேளாண்
வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய
விளை பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வதற்கான தொழில்நுட்ப மையம் காமராஜர் அறிவியல் மையத்தில்
அமைக்கப்படும்.
உணவு தானியங்கள்,
காய்கறிகள், பழங்கள், வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் செய்யும் தொழில்களில்
ஈடுபடும் தனிநபர் விவசாயி, கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 சதவீத மானியம்
வழங்கப்படும்.
மொபைல் 'செயலி'
அறிமுகம்
மொபைல் செயலி,
விவசாயிகள் நிதி உதவி பெறுவதற்கும், இடு பொருட்களின் கையிருப்பு, வானிலை நிலவரங்களை
அறிவதற்கும், பதிவு செய்வதற்கும் பெரிதும் பயன்படும். இதற்காக மொபைல் 'செயலி' ஒன்று
அறிமுகம் செய்யப்படும்.
இ.சி.ஆரில்,
நவீன வேளாண் விளை பொருட்கள் விற்பனை வளாகம் (இ-நார்ம் மண்டி) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய உழவர் சந்தைகள் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை
கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்படும்.
புதிய உழவர் சந்தை அமைக்கப்படும்
சாலையோரமாக
அமைந்துள்ள காய்கறி அங்காடிகளை முறைப்படுத்தும் நோக்கில், புதிய உழவர் சந்தை வில்லியனுார்,
திருக்கனுாரில் இந்தாண்டு அமைக்கப்படும்.
புதிய தடுப்பணைகள்
நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க புதுச்சேரி, காரைக்காலில் தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்
பட்டுள்ளது.இதற்காக பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய
அரசிடம் உதவி கோரப்படும்.
ரூ. 60 லட்சம்
செலவில் 5 ஆழ்குழாய் கிணறுகள்
புதிய ஆழ்குழாய்
கிணறுகாரைக்கால் மாவட்டத்தில் புதிய சமுதாய ஆழ்குழாய் தேவை அதிகரித்துள்ளதால் ரூ.
60 லட்சம் செலவில் 5 ஆழ்குழாய் கிணறுகள் புதுப்பிக்கப்படும் அல்லது புதிதாக நிறுவப்பட
உள்ளன.
காரைக்காலில்
விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டுவர விவசாயிகளுக்கு
ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு
2 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு
90% மானியம்
காரைக்காலில் விவசாயிகள் பாசன நீரை கொண்டு செல்ல திறந்தவெளி வாய்க்காலைப் பயன்படுத்துவதால் நீர் அதிகளவில் வீணாகிறது. இதனைத் தவிர்க்க ஏதுவாக, அடர்த்தி குறைந்த பாலித்தீன் குழாய்கள் மூலம் நீர் பாய்ச்ச, பொது பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதர பிரிவு விவசாயிகளுக்கு 90 சதவீத மானியம், நபர் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கு மிகாமல் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
காரீப் பருவ சாகுபடி- புதியதாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!
PM கிசான்: திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார்? நன்மைகளைப் பெற தேவையான ஆவணங்கள் என்ன?
சிறந்த டிராக்டர்கள் வெறும் ரூ. 5 லட்சம்!! விவசாயிகளுக்கு ஏற்ற டாப் 10 டிராக்டர்கள்!! முழு விவரம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...