நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள்!!



நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள்!!


இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டாரப் பகுதிக்குட்பட்ட தளிர், மருங்கூர் மற்றும் ஆர்.எஸ்.மங்களம் வட்டாரப் பகுதிக்குட்பட்ட பாரனூர் கிராமங்களில் இராமநாதபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இளஞ்செழியன் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை, திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்களம் வட்டாரங்களைச் சார்ந்த வேளாண் அதிகாரிகள் இணைந்து வயல்வெளி ஆய்வு நடத்தினர்.


தற்பொழுது மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ள, வடிகால் வசதி இல்லாமல் தண்ணீர் தேங்கியுள்ள நெல் வயல்களில் கூண்டுப்புழுவின் தாக்குதல் ஆங்காங்கே சில இடங்களில் பரவலாக தென்படுகிறது.


சாதகமான காரணிகள்


1. பருவம் தவறிய பிந்தைய நடவு


2. வடிகால் வசதியில்லாத தண்ணீர் தேங்கியுள்ள வயல்


3. அதிகமான மழைப்பொழிவு


4. குறைந்த வெப்பநிலை


சேத அறிகுறிகள்


1. கூண்டுப்புழுவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாற்றின் நுனியானது வெட்டப்பட்டிருக்கும்.


2. வெட்டப்பட்ட சிறு இலைத்துண்டுகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டுகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும்.


3. கூடுகளில் பழுப்பு நிறத் தலையையுடைய புழுக்கள் இருக்கும்.


4. கூடுகளானது பயிரிலும் தொங்கிக் கொண்டு இருக்கும்.


5. புழுவானது இலையில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால், தாக்கப்பட்ட இலைகளானது வெண்ணிறமாகக் காணப்படும்.


6. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.


மேலாண்மை முறைகள்


கூண்டுப்புழுவினைக் கட்டுப்படுத்த வயலில் தேங்கியுள்ள தண்ணீரை முதலில் வடித்து விட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு பென்தோயேட் (50 ஈசி) 400 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் (20 ஈசி) 400 மிலி அல்லது குயினால்பாஸ் (25 ஈசி) 80 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். 


கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதே போல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தின் திறனை அதிகப்படுத்த மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு, முனைவர் கு.இளஞ்செழியன், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) மற்றும் முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க....


நெல் பயிரியில் தத்துப் பூச்சிகள் தாக்குதல் மற்றும் சேத அறிகுறிகள்! பயிரை பாதுகாப்பது பற்றிய முழு விளக்கம்!!


நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் வாருங்கள்!!


தை பட்டத்தில் உளுந்து சாகுபடி! எந்தெந்த இரகங்களுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கும்?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments