Random Posts

Header Ads

இன்று பிற்பகல் வரை அதி கனமழை! 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்!!



இன்று பிற்பகல் வரை  அதி கனமழை! 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்!!

வட தமிழகத்தில் இன்று பிற்பகல் வரை மிக கனமழை பொழியக்கூடும் என்பதால் அரசு, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. நீர்மட்டம் உயர்ந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதில் சிரமம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், பல தாழ்வான குடியிருப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தென்சென்னையின் பல பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி பணிகள் மேற்கொண்டு வருகிறது.

இதே நேரத்தில், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னைக்கு அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இது மெதுவாக கரையைக் நோக்கி நகர்ந்து வருவதால், இன்னும் சில மணி நேரங்களில் முழுவதும் கரையைக் கடக்கும் நிலையில் உள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.

தெற்கு–தென்மேற்கு திசையில் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த தாழ்வு மண்டலம் விரைவில் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. மேலும், தொடர்ச்சியான மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கையாக இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

தற்போது வினாடிக்கு 1,330 கன அடி நீர் ஏரிக்குள் புகுந்து வருகிறது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியான இதில், 3,110 மில்லியன் கன அடி நீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📞 மேலும் தொடர்புக்கு

Time To Tips தளத்தின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், மற்றும் பயனுள்ள வழிகாட்டல்களை தொடர்ந்து அறிந்துகொள்ள, எங்களது YouTube சேனலை பின்தொடருங்கள்:

🎥 Time To Tips – YouTube சேனல்


🌿 விவசாயிகள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்காக

அரசு திட்டங்கள், மானியங்கள், காப்பீடு, மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
உடனுக்குடன் பெற எங்களது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

🔗 வாட்சப் குழுவில் சேர: Time to Tips  (Join WhatsApp Group)


🙏 நன்றி!

உங்கள் ஆதரவு தான் எங்கள் ஊக்கம் 💚
தொடர்ந்து “Time to Tips” உடன் இணைந்திருங்கள் — பயனுள்ள தகவல்கள், நம்பகமான வழிகாட்டல்கள், மற்றும் புதிய அறிவிப்புகள் உடனுக்குடன்!


Post a Comment

0 Comments