Random Posts

Header Ads

கனமழை பாதிப்பு: விவசாயிககளுக்கு ஹெக்டேருக்கு ₹20,000 நிவாரணம், கால்நடைகளுக்கும் நிவாரணம்!!

 


கனமழை பாதிப்பு: விவசாயிககளுக்கு ஹெக்டேருக்கு ₹20,000 நிவாரணம் அறிவிப்பு!! கால்நடைகளுக்கு நிவாரணம்!!


தமிழகத்தில் அக்டோபர் 2025ல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கான நிவாரணம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.


முக்கிய தகவல்கள்:

மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்கள் அழிந்துள்ளன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளிலும் மழை நீர் தேங்கி விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்.


இழப்பீடு விவரம்:

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்.

கணக்கெடுப்பு முடிந்தவுடன், 4,235 ஹெக்டேர் வேளாண்பயிர்கள் மற்றும் 345 ஹெக்டேர் தோட்டப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

மழை காரணமாக உயிரிழந்த 582 கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

1601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன; இவை கூட நிவாரணம் பெறும்.


மனித உயிருக்கும் பாதிப்பு:

டிட்வா புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர் (சுவர் இடிந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர்).


சென்னையில் நிலவரம்:

சென்னையில் ஒரே நேரத்தில் கனமழை பெய்து, சில இடங்களில் தண்ணீர் தேங்கி ஏற்பட்ட தடை நிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சீர்செய்தனர். சாலைகளில் முறிந்து விழுந்த 27 மரங்களை அகற்றியுள்ளனர்.

மழை பாதிப்பு குறித்து அரசு தொடர்ந்து கணக்கெடுப்பை மேற்கொண்டு, விரைவில் நிவாரணம் வாழங்கபடும் என தமிழக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


📞 மேலும் தொடர்புக்கு

Time To Tips தளத்தின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், மற்றும் பயனுள்ள வழிகாட்டல்களை தொடர்ந்து அறிந்துகொள்ள, எங்களது YouTube சேனலை பின்தொடருங்கள்:

🎥 Time To Tips – YouTube சேனல்


🌿 விவசாயிகள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்காக

அரசு திட்டங்கள், மானியங்கள், காப்பீடு, மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
உடனுக்குடன் பெற எங்களது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

🔗 வாட்சப் குழுவில் சேர: Time to Tips  (Join WhatsApp Group)


🙏 நன்றி!

உங்கள் ஆதரவு தான் எங்கள் ஊக்கம் 💚
தொடர்ந்து “Time to Tips” உடன் இணைந்திருங்கள் — பயனுள்ள தகவல்கள், நம்பகமான வழிகாட்டல்கள், மற்றும் புதிய அறிவிப்புகள் உடனுக்குடன்!


Post a Comment

0 Comments