மழை வெள்ளத்தில் மூழ்கிய சம்பா நெல் – தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரடி ஆய்வு!!
மதுக்கூர் வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பரப்பினை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வித்யா.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது 4170 எக்டர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாத கடைசியில் மதுக்கூர் வட்டாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக பெரிய கோட்டை சொக்கனாவூர் புளியங்குடி கன்னியாகுறிச்சி களிச்சான் கோட்டை உலயகுன்னம்,மதுரபாசணிபுரம்,காரப்பங்காடு, சிரமேல்குடிகோட்டகம் காடந்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில்,
சாவித்திரிஃஏடீடீ51, போன்ற நீண்ட கால ரகங்களும் ஏடீடீ54,கோ52 , பிபிடி5204 போன்ற மத்திய கால ரகங்களும் கடந்த 10 தினங்களாக தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளது. கடைமடை பகுதியாக இருப்பதால் மழை நின்ற போதிலும் வடவாறு வாய்க்கால் மற்றும் பாமினி ஆற்றின் அதிகமான வடிநீரினாலும் வடிகால் வாய்க்கால் வில் இருந்து கூடுதல் நீர் பொலிந்து நடவு பரப்பில் தேங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகதொடர் கோரிக்கை வரப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வித்யா அவர்கள் இன்று மதுக்கூர் வட்டாரத்துக்கு வருகை புரிந்து தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீரை முழுங்கி உள்ள சம்பா பயிர்கள் உள்ள பெரிய கோட்டை சொக்கநாவூர் கிராமங்களில் வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் பெரியகோட்டை உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் உள்ளிட்ட அலுவலர்களுடன் இணைந்து விவசாயிகளை நேரடியாக சந்திப்பில் மழை வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார்.
பெரிய கோட்டை விவசாயிகள் சுரேஷ் ரங்கசாமி உள்ளிட்ட விவசாயிகள் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனரிடம் எடுத்துக்கூறி உரிய பயணிவாரணம் பெற்று தருமாறு கேட்டுக் கொண்டனர். வேளாண்மைஇணை இயக்குனர் வயலில் தேங்கி நிற்கும் கூடுதல் நீரினை நீர் வடிந்த பின் செய்ய வேண்டிய பயிர் மேலாண்மை பற்றி எடுத்துக் கூறினார்.
மேலும் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசால் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியில் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேளாண் உதவி அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
📞 மேலும் தொடர்புக்கு
Time To Tips தளத்தின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், மற்றும் பயனுள்ள வழிகாட்டல்களை தொடர்ந்து அறிந்துகொள்ள, எங்களது YouTube சேனலை பின்தொடருங்கள்:
🎥 Time To Tips – YouTube சேனல்
🌿 விவசாயிகள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்காக
அரசு திட்டங்கள், மானியங்கள், காப்பீடு, மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
உடனுக்குடன் பெற எங்களது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
🔗 வாட்சப் குழுவில் சேர: Time to Tips (Join WhatsApp Group)
🙏 நன்றி!
உங்கள் ஆதரவு தான் எங்கள் ஊக்கம் 💚
தொடர்ந்து “Time to Tips” உடன் இணைந்திருங்கள் — பயனுள்ள தகவல்கள், நம்பகமான வழிகாட்டல்கள், மற்றும் புதிய அறிவிப்புகள் உடனுக்குடன்!

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...