மதுக்கூர் வட்டாரத்தில் அதிரடி வேளாண் ஆய்வு! நெல் மழை சேதம், பிஎம்கிசான் தகுதி – துணை இயக்குனர் அய்யம்பெருமாள் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்!!
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தீடிர் ஆய்வு செய்த வேளாண் துணை இயக்குனர் அய்யம்பெருமாள். மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைப்படி மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாட்டாகுடி மதுக்கூர் வடக்கு மோகூர் கருப்பூர் மற்றும் ஆலம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்டவேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ஐயம்பெருமாள் சம்பா நெல் பயிரில் மழைக்கால மேலாண்மை மற்றும் பி எம் கிசான் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.
மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ்,
அசோலா தொட்டிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் விரட்டும் மருந்து கிட் இரண்டு எண்கள் வரப்பெற்றது. இதற்கான விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வேளாண் துணை இயக்குனர் அய்யம்பெருமாள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மதுக்கூர் வட்டாரத்தில் நவம்பர் மாதம் பெய்த மழையினால் மூழ்கியுள்ள நெல் பயிர்கள் உள்ள மோகூர் உலயகுன்னம் பெரியகோட்டை சொக்கனாவூர் புளியங்குடி ஆகிய கிராமங்களில் வேளாண்மைதுணை இயக்குனர் நேரடியாக ஆய்வு செய்து மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். பிஎம்கிசான் கிட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்துள்ள விவசாயிகளின் ஆவணங்கள் நேரடியாக விவசாயிகளிடம் ஆய்வு செய்யப்பட்டு பிஎம்கிசான் உதவி தொகை காண தகுதியினை ஆய்வு செய்தார்.
பின் தளிக்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் அணுசரணை ஆராய்ச்சி திடல் வயலினை ஆய்வு செய்து ரகம் வாரியாக நெல் பயிரின் காணப்படும் வேறுபாடுகளை துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பதிவு செய்திட அறிவுறுத்தினார். வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு சுரேஷ் தினேஷ் ராமு ம ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அட்மா திட்ட அலுவலர்கள் சஅய்யா மணி மற்றும் ராஜு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேளாண் அலுவலர் சரவணன் திட்டத்துக்கான ஆய்வின்போது உடனிருந்தனர்.
பெரிய கோட்டை சொக்கனாவூர் கிராமங்களில் வெள்ள பாதிப்பினை தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர்.
📞 மேலும் தொடர்புக்கு
Time To Tips தளத்தின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அரசு அறிவிப்புகள், மற்றும் பயனுள்ள வழிகாட்டல்களை தொடர்ந்து அறிந்துகொள்ள, எங்களது YouTube சேனலை பின்தொடருங்கள்:
🎥 Time To Tips – YouTube சேனல்
🌿 விவசாயிகள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்காக
அரசு திட்டங்கள், மானியங்கள், காப்பீடு, மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
உடனுக்குடன் பெற எங்களது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
🔗 வாட்சப் குழுவில் சேர: Time to Tips (Join WhatsApp Group)
🙏 நன்றி!
உங்கள் ஆதரவு தான் எங்கள் ஊக்கம் 💚
தொடர்ந்து “Time to Tips” உடன் இணைந்திருங்கள் — பயனுள்ள தகவல்கள், நம்பகமான வழிகாட்டல்கள், மற்றும் புதிய அறிவிப்புகள் உடனுக்குடன்!

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...