தை பட்டத்தில் உளுந்து சாகுபடி! எந்தெந்த இரகங்களுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
தை பட்டத்தில்
உளுந்து சாகுபடி
நிலத்தின் வளத்தினை
பாதுகாத்திட பயறு வகை பயிர்களை ஒரு பருவத்தில் பயிரிடுவது மிகவும் அவசியம். மேலும்
பயறுவகை பயிர்கள் பயிரிடுவதால், அதிக செலவில்லாமல், குறைந்த நாட்களில் அதிக வருமானம்
ஈட்டலாம்.
முன்பு டெல்டா
மாவட்டங்களில் மிதி உளுந்து சாகுபடி வழக்கமாக இருந்தது. ஆனால் இயந்திர அறுவடை செய்ய
ஆரம்பித்தில் இருந்து அந்த வழக்கத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
அறுவடை செய்த
பிறகு வைக்கோலை கட்டாக்கி, பின்னர் நிலத்தில் ஈரம் மெழுகு பதத்தில் இருந்தால் உளுந்து
விதைகளை விதைத்து விடலாம் அல்லது உழவு செய்து பின்னர் விதைத்து விடலாம்.
உளுந்து இரகங்கள்
மற்றும் சிறப்பியல்புகள்
பொதுவாக ஆடுதுறை
இரகங்கள் களிவாகான மண்ணில் அதிக மகசூல் தருகிறது. வம்பன் இரகங்கள் மணற்சாரியான மண்ணில்
நல்ல மகசூல் தருகிறது.
இரகம் வயது
சிறப்பயில்புகள் மகசூல்
ஆடுதுறை 3
70 முதல்
75 நாட்கள் நெல்லுக்கு பிந்திய பருவத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். ஏக்கருக்கு
300 கிலோ மகசூல்.
ஆடுதுறை 5
70 முதல்
75 நாட்கள் நெல்லுக்கு பிந்திய பருவத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். மஞ்சள் தேமல்
நோய்க்கு சிறிதளவு எதிர்ப்பு சத்தி உடையது. சாம்பல் மற்றும் வேர் அழுகல் நோய்க்கு எதிர்ப்பு
சக்தி உடையது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல்.
ஆடுதுறை 6
65 முதல்
70 நாட்கள் நெல்லுக்கு பிந்திய பருவத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். மஞ்சள் தேமல்
நோய்க்கு சிறிதளவு எதிர்ப்பு சத்தி உடையது. சாம்பல் நோய்க்கும் எதிர்ப்பு சக்தி உடையது
ஏக்கருக்கு 300 கிலோ மகசூல்.
வம்பன் 6
65 முதல் 70 நாட்கள் தை பட்டத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். மஞ்சள் தேமல் நோய்க்கு
சிறிதளவு எதிர்ப்பு சத்தி உடையது. ஏக்கருக்கு 350 கிலோ மகசூல்.
வம்பன் 8
65 முதல்
70 நாட்கள் தை மற்றும் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். மஞ்சள் தேமல்
நோய், இலை சுருட்டல் நோய் மற்றும் சாம்பல் நோய்க்கும் எதிர்ப்பு சக்தி உடையது. ஏக்கருக்கு
450 கிலோ மகசூல்.
வம்பன் 9
70 முதல்
75 நாட்கள் நெல்லுக்கு பிந்திய பருவத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம். மஞ்சள் தேமல்
நோய், இலை சுருட்டல் நோய் மற்றும் சாம்பல் நோய்க்கும் ஓரளவு எதிர்ப்பு சக்தி உடையது
ஏக்கருக்கு 450 கிலோ மகசூல்.
வம்பன் 10
70 முதல்
75 நாட்கள் தை மற்றும் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்திட ஏற்ற ஏக்கருக்கு 450 கிலோ
மகசூல்.
வம்பன் 11
70 முதல்
75 நாட்கள் தை மற்றும் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்திட ஏற்ற இரகம் ஏக்கருக்கு
450 கிலோ மகசூல்.
தகவல் வெளியீடு
விதைச்சான்று
மற்றம் அங்ககச்சான்று, உதவி இயக்குநர், நாகப்பட்டினம்.
மேலும் படிக்க....
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...