ஆடி, புரட்டாசி,
தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து இரகங்கள்!!
பயறு வகைகள்
மனிதர்களுக்கு தேவையான புரதத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவை
பொருத்தவரை 80 சதவீதம் பயறு வகைகள் மானாவாரியாக மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றன.
பயறு உற்பத்தி
செய்வதோடு பயன்படுத்துவதிலும் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு
இயக்கத்தின் மூலமாக பயறு உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக பாரம்பரியமாக பயறு சாகுபடி செய்யப்படும் பகுதிகள் தவிர இதர பகுதிகளிலும்
பயறு வகை சாகுபடி மற்றும் உற்பத்தியும் ஊக்குவிக்கப்படுகிறது.
வேளாண் மக்களுக்கு
இத்திட்டத்தின் மூலமாக தரமான விதைகள் விநியோகம் செய்யப்படுவதோடு விதை உற்பத்தியாளர்களுக்கு
விதை உற்பத்தி மானியமும் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை
மாவட்டத்தில் வம்பன் 6, வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ஆகிய உளுந்து இரகங்கள் பரவலாக சாகுபடி
செய்யப்பட்டு வருகின்றன. வம்பன் 6 இரகம் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. மஞ்சள் தேமல்
நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
ஹெக்டருக்கு
890 கிலோ மகசூல் தரக்கூடியது. வம்பன் 8 இரகம் இலை சுருட்டு புழு, மஞ்சள் தேமல் நோய்க்கு
எதிர்ப்புத்திறன் கொண்டது. புரதத்தின் அளவு 21.9 சதவீதம் ஆகும். ஒரே நேரத்தில் பூக்கும்
தன்மை உடையது. அறுவடை நேரத்தில் விதைகள் உதிராத காரணத்தினால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது.
ஒரு ஹெக்டருக்கு 988 கிலோ மகசூல் தரக்கூடியது.
வம்பன் 10 ரபி
பருவத்திற்கு எற்றது. ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையது. இலை சுருட்டு புழு மற்றும்
மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஹெக்டருக்கு 1130 கிலோ மகசூல் தரக்கூடியது.
தற்பொழுது வம்பன்
11 என்ற புதிய இரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை
பட்டங்களுக்கு ஏற்றது. மேலும் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. புரதத்தின்
அளவு 22.6 சதவீதம் ஆகும். ஹெக்டருக்கு 896 கிலோ மகசூல் தரக்கூடியது.
எனவே எதிர்வரும்
பருவத்தில் பயறு சாகுபடி செய்யவுள்ள விதைப்பண்ணை விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆதார
விதைகளை பெற்றிட தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளுமாறு புதுக்கோட்டை
மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா.ஆனந்தசெல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு!!
ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய் அறிகுறிகள் மற்றும் நோய் தடுப்பு வழி முறைகள்!!
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...