பிரதம மந்திரி
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு!!
மாவட்ட நிர்வாக
அழைப்பு
செங்கல்பட்டு
மாவட்டத்தில் ராபி 2021ல் நெல் II சம்பா பருவத்திற்கு மத்திய மாநில அரசின் திருந்திய
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள
விவசாயிகள் சேர்ந்து பலன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்,
முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
இத்திட்டத்தில்
அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் பயிருக்கு மட்டும்
ராபி 2020-21ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளும்
குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் சேரத்தகுதி உள்ளவர்கள் ஆவர்.
பயிர்கடன் பெறும்
விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகளும்
விருப்பத்தின் பேரில் சேரலாம்.
இழப்பீடு எதற்கெல்லாம்
பொருந்தும்
விதைக்க, நடவு
செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர்
அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க
தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
நகல்,
2. வங்கி கணக்கு
எண் மற்றும் IFSC தகவல்களுடன் கூடிய பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்,
3. கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா,
4. நடப்பு சாகுபடி
அடங்கல்,
5. முன் மொழிவு
படிவம்,
6. மற்றும் விவசாயி
பதிவு படிவம்.
ஆகியவற்றுடன்
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பிரிமியம்
செலுத்த வேண்டும்?
செங்கல்பட்டு
மாவட்ட விவசாயிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.473/-
செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு
செய்ய கடைசி தேதி
மேற்கண்ட நெல்
பயிர் காப்பீடு செய்திட கடைசி தேதி 15.11.2021 ஆகும். மேலும் விரிவான விபரங்களுக்கு
தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
பயிர் காப்பீடு
செய்வது எப்படி?
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து, விவசாயிகள் பலன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கல்!
தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு முக.ஸ்டாலின் வெளியிட்டார்!
புதியதாக நெற்பயிருக்குக் காப்பீடு செய்ய - விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கர்க்கு ரூ.31,000 இழப்பீடு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...