பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கல்!!


சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை, 1,597.18 கோடி ரூபாயை, ஆறு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.


வேளாண் துறையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் மிகவும் இன்றியமையாததாகும்.



இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான வேளாண்மைத் துறைக்கென 2021-22ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதோடு, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்படுகிறது.


தமிழகத்தில், 2020 - 21ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 42.75 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா மற்றும் குளிர் கால பருவப் பயிர்கள் காப்பீடு செய்ய, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.குறுவை பருவத்திற்கான இழப்பீட்டு தொகையாக, 133.07 கோடி ரூபாய், 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.



நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி, 2021 - 22ல் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 2,327 கோடி ரூபாயை, வேளாண் பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியது. அதில், சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டு கட்டண மானியமாக, 1,553.15 கோடி ரூபாய், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


இதன் காரணமாக, சம்பா பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையான, 1,597.18 கோடி ரூபாயில், 'இப்கோ - டோக்யோ' பொது காப்பீட்டு நிறுவனத்தின் வழியாக, 1,089.53 கோடி ரூபாய்; இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் வழியாக, 507.65 கோடி ரூபாய், ஆறு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.


இதை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின், 10 விவசாயிகளுக்கு நேற்று இழப்பீட்டு தொகையை வழங்கினார்.நடப்பாண்டு, சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய, 13ம் தேதி வரை 61 ஆயிரத்து, 871 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்; 67 ஆயிரத்து 556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 



இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் இறையன்பு, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை பங்கேற்றனர்.


மேலும் படிக்க....


ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய் அறிகுறிகள் மற்றும் நோய் தடுப்பு வழி முறைகள்!!


சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!


வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! வாழைக்கான விலை முன்னறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post