சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!


நல்ல லாபகரமான வேளாண்மைக்கு நல்விதை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு இன்றியமையாததாகும். இதில் முக்கியமானது மற்றும் ஆதாரம் நல் விதையாகும்.


1. நல்விதை அல்லது தரமான விதை எனப்படுவது யாதெனில்,


2. பாரம்பரிய குணங்களைக் கொண்டிருத்தல்,


3. அதிகபட்ச முளைப்புத்திறனை கொண்டிருத்தல்,



4. பிற இரகங்கள் மற்றும் களைச்செடிகளின் விதைகள் இல்லாது இருத்தல்,


5. பூச்சி நோய்த் தாக்கம் இல்லாது இருத்தல்,


6. மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாது இருத்தல்,


7. விதைச்சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகள் மேற்குறிய அனைத்து குணங்களைக் கொண்டிருக்கும்.


சான்று பெற்ற விதை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நிலை விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலில் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது.


விதை உற்பத்தியாளர்கள் விதைத்த 35 நாட்கள் அல்லது பூப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக விதைப்பண்ணைகளை ஸ்பெக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணை அறிக்கை பதிவிறக்கம் செய்து 3 நகல்களுடன் இராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவுலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 


விதை உற்பத்தியாளர்கள் விதைப்பு அறிக்கையுடன் விதை உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சான்று அட்டைகள், விதை வாங்கியதற்கான அசல் ரசீது, உரிய பதிவு கட்டணம் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும்.


பதிவு செய்த விதைப்பண்ணைகள் பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட வயல்மட்ட விதைகளுக்கு விதை சுத்தி அறிக்கை வழங்கப்படுகிறது.


விதைப்பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வயல்மட்ட விதைகள் அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்தமான ஒரே மாதிரியான சுத்தி விதைகள் பிரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.



பகுப்பாய்வில் தேறிய விதைக்குவியலுக்கு சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.


இதனை, இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


பாஸ்பேடிக், பொட்டாசியம் உரங்களுக்கான மானிய விலை உயர்வை மேலும் ஓராண்டிற்கு நீடிப்பு!!


வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! வாழைக்கான விலை முன்னறிவிப்பு!!


மக்காச்சோளம் இயற்கை சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family.

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post