பாஸ்பேடிக், பொட்டாசியம் உரங்களுக்கான மானிய விலை உயர்வை மேலும் ஓராண்டிற்கு நீடிப்பு!!


மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான உயர்த்தப்பட்ட மானிய விலையை 20-05-2021 தேதியிட்ட அறிவிக்கையின் படி 01-10-2021 முதல் 31-03-2022 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.


டை அம்மோனியம் பாஸ்பேட்டின் (DAP) சர்வதேச சந்தை விலை உயர்வை மனதில் கொண்டு இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. டை அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு வழங்கப்படும் மானியத்தை பை ஒன்றுக்கு 438 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டை அம்மோனியம் பாஸ்பேட்டை மலிவு விலையிலேயே விவசாயிகளுக்கு கிடைக்க ஒரு முறை சிறப்பு தொகுப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



மிக அதிகமாக பயன்படுத்தப்படும் NPK தரத்தை (10:26:26,20:20:0:13 மற்றும் 12:32:16) தயாரிக்க பயன்படுத்தப்படும் கச்சா பொருட்களின் சர்வதேச விலை உயர்வை கருத்தில் கொண்டு, இவற்றிற்கு வழங்கப்படும் மானியம் பை ஒன்றுக்கு 100 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 


ஒரு முறை சிறப்பு தொகுப்பாக உயர்த்தப்பட்டுள்ள இந்த மானியத்தின் மூலம் விவசாயிகளுக்கு NPK தர உரங்கள் மலிவு விலையில் கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் மொலாஸஸிலிருந்து துணை பொருளாக உற்பத்தி செய்யப்படும் பொட்டாஷ்ஷியத்தை ஊட்டசத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.


2010-க்கு பிறகு முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால் பொட்டாசியத்தின் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். இவ்வகை உரங்கள் PDM-0:0:14: 5:0 என்று அறியப்படுகிறது. 


மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் கனிமங்கள் அடிப்படையிலான பொட்டாசியம் உரம் 100 சதவீத இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்க முடியும். தற்போது ஆண்டுக்கு 42 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக சுமார் 7,160 கோடி ரூபாய் வரை இந்த வகை உரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.



மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் கரும்பு விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பத்தோடு மட்டுமல்லாமல் சர்க்கரை ஆலைகளின் வருமானமும் அதிகரிக்கும் உர நிறுவனங்கள் விவசாயிகளுக்கு 600 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை விற்கப்படும், 50 கிலோ கொண்ட பை ஒன்றுக்கு 73 ரூபாய் வரை விலை தள்ளுபடி வழங்கமுடியும்.


இந்த நடவடிக்கையினால் மத்திய அரசுக்கு தோராயமாக 156 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் 562 கோடி ரூபாய் வரை அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.


மேலும் படிக்க....


மக்காச்சோளம் இயற்கை சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை!!


வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! வாழைக்கான விலை முன்னறிவிப்பு!!


மலை பகுதியில் சுழற்சி முறையில் பந்தல் காய்கறிகள் அசத்தும் பெண் விவசாயி அனுசுயா!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post