மக்காச்சோளம் இயற்கை சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை!!
இயற்கை முறையில்
மக்காச்சோளம் சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு (டிராக்டரில்) லோடு மக்கிய தொழு உரம் அல்லது இரண்டு லோடு ஊட்டமேற்றிய தொழுவுரம் அல்லது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ/2லிட் சூடோமோனஸ், 4 கிலோ/2லிட் மெட்டாரைசியம், 75 கிலோ சாம்பல், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது.
வரப்பு பயிராக ஆமணக்கு, வெள்ளை சோளம், தட்டை பயிறு போன்றவற்றை பயிரிடலாம். சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி இரண்டு எண்கள் அல்லது மற்றும் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து கொள்ளும் ப்ரமோண் டிராப் எனப்படும் பொறிகளை 20 எண்ணிக்கையிலும் வைப்பது நல்லது.
படைப்புழு தாக்கத்தை
சமாளிக்க 4 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி பேவேரியா
பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சிஎன்சிஸ் என்ற திரவங்களை 100 கிராம் மைதா மாவு அல்லது
அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து பயிர்களின் மடலுக்குள் இறங்குமாறு பொறுமையாக இடைவெளி
விட்டு விடாமல் தெளிக்க வேண்டும். 45 நாட்கள் வரை இதை அவசியம் செய்ய வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி
அளிப்பு அட்டவணை
3ம் நாள்
உயிர் தண்ணீருடன்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.
5ம் நாள்
E.M 200 ml
per 10-liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான
அளவு தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து தரைவழி தரவும்.
நடவு செய்த
10ம் நாள்
பஞ்சகாவியா
200 ml per 10 liter tank spray செய்யவும்.
நடவு செய்த
15ம் நாள்
ஜீவாமிர்தம்
ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.
20ம் நாள்
மீன் அமிலம்
100 ml per 10-liter tank தெளிக்கலாம்.
25ம் நாள்
பஞ்சகாவியா
200 ml per 10-liter tank spray/கரைசல் தெளிக்கலாம்.
30ம் நாள்
பஞ்சகாவிய
200 ml per 10-liter tank spray செய்யவும். தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம்
கொடுக்கலாம்.
32ஆம் நாள்
ஒரு ஏக்கருக்கு
1 லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.
35ம் நாள்
பஞ்சகாவிய/
இஎம் கரைசல் 200 ml per 10-liter டேங்க் இருக்கு தெளிப்பாக கொடுக்கலாம்.
40ம் நாள்
தரைவழி ஏக்கருக்கு
2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.
45ம் நாள்
பஞ்சகாவிய/
இஎம் கரைசல் 200 ml per 10 liter டாங்கிற்கு தெளிப்பாக கொடுக்கலாம்.
50ம் நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம், இரண்டு லிட்டர் பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.
55ம் நாள்
கற்பூர கரைசல்
spray செய்யவும் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம்.
60ம் நாள்
10 லிட்டர்
தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன்
அமிலம் கொடுக்கலாம்.
62ஆம் நாள்
ஒரு ஏக்கருக்கு
1 லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.
65ம் நாள்
தரைவழி ஒரு
ஏக்கருக்கு 2 லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.2 கிலோ வேம், 2 கிலோ பொட்டாஷ்
பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம்.
70ம் நாள்
ஜீவாமிர்தம்
ஒரு ஏக்கருக்கு 200 லிட்/ மீன் அமிலம் 2 லிட்டர் தரைவழி தரவும்.
75ம் நாள்
கற்பூர கரைசல்
spray செய்யவும்
80ம் நாள்
தரைவழி ஒரு
ஏக்கருக்கு 2 லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.2 கிலோ வேம், 2 கிலோ பொட்டாஷ்
பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம்.
90ம் நாள்
மாலையில் ஒரு
ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம், 1 லிட் சூடோமோனஸ் தரைவழி தரவும்.
95ம் நாள்
தரைவழி ஒரு
ஏக்கருக்கு 2 லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம். 2 கிலோ வேம், 2 கிலோ
பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம். ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஒரு
ஏக்கருக்கு அமிர்தக்கரைசல் 200 லிட்டர், ஜீவாமிர்தம் 200 லிட்டர், மீன் அமிலம் 2 லிட்டர்,
இஎம் கரைசல் 2 லிட்டர், பஞ்சகாவியா 3 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து
விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.
இயலுமானால்
மக்காச்சோள சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 50
to 55 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு. இதனால் களைகள் கட்டுப்படும்
என்பது மேலும் சிறப்பு. இதனை நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவினர் கூறியுள்ளனர்.
தகவல் வெளியீடு
கோ.
சுரேஷ்குமார், தொழிற்கல்வி ஆசிரியர், (வேளாண்மை), சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி,
நாகலாபுரம். தூத்துக்குடி (மாவட்டம்). தொடர்புக்கு: 94436 20932, Mail: sureshkumarpdr@gmail.com
மேலும் படிக்க....
வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! வாழைக்கான விலை முன்னறிவிப்பு!!
மலை பகுதியில் சுழற்சி முறையில் பந்தல் காய்கறிகள் அசத்தும் பெண் விவசாயி அனுசுயா!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...