ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய் அறிகுறிகள் மற்றும் நோய் தடுப்பு வழி முறைகள்!!


மழைக்காலத்தில் கவனமாக இருக்க அறிவுரை


மழைக்காலங்களில் ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது, என, கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. நீல நாக்கு நோய் என்பது, மழைக்காலங்களில் ஆடுகளை அதிகம் பாதிக்கக்கூடிய ஒரு நுண்ணுயிரி நோய்.



நீல நாக்கு நோய் அறிகுறிகள்


இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு, காய்ச்சல், வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படும். ஒரு வயதிற்குட்பட்ட இளம் ஆடுகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் குட்டிகளுக்கு, இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால், தாய்ப்பால் கிடைக்காத குட்டிகளே அதிகம் தாக்குதலுக்கு ஆளாகின்றன. 


மழை காலமான, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. ‘ரியோ விரிடே எனும் பூச்சிகளால் பரவக்கூடிய ‘ஆர்பி வைரஸ், நீல நாக்கு நோயினை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் மழைக்காலத்தில் ஆடுகளைக் கடிக்கும் போதும் நீல நாக்கு நோய் பரவுகிறது.



நோய்கள் பாதிப்புக்குள்ளான ஆடுகளின் நடவடிக்கை


பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து, தீவனம் உட்கொள்ளாமல் இருக்கும். மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள சவ்வு சிவந்து காணப்படும். மூக்கு மற்றும் கண்ணில் இருந்து திரவம் வடியும். உதடுகள், ஈறுகள், வாய்ச்சவ்வு, நாக்கு ஆகியவை சிவந்து, புண்கள் தோன்றும், நாக்கு நீல நிறமாக காணப்படும். 


ஆடுகள் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொள்ளும். குளாம்பின் மேல்பகுதி சிவந்து வீங்கிக் காணப்படும். ஆடுகள் நொண்டியபடியே நடக்கும். கண்ணில் உட்சவ்வு சிவந்து, கண்களின் இமை ஒட்டிக்கொள்ளும். கெட்ட வாடையுடன் கழிச்சல் ஏற்படும். நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சு விட சிரமம் ஏற்படும்.


மற்ற ஆடுகளில் இருந்து தனிமைப்படுத்துதல் அவசியம்


இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆடுகள், நேரடி சூரிய ஒளியில் படாமல் பராமரிக்க வேண்டும். போதுமான ஓய்வு அளித்து, அரிசி, ராகி மற்றும் கம்பங்கூழ் தயாரித்துப் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் பருக கொடுக்க வேண்டும். புண்களின் மீது கிளிசரினை தடவ வேண்டும்.



நோய்கள் தடுப்பு நடவடிக்கை


ஒரு கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயினை ஒரு நாளைக்கு, 2 – 3 முறை கழுவ வேண்டும். 


பாதிப்பு அறிகுறிகளை கண்டவுடன், கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும். முறையான இடைவெளியில், தடுப்பூசி போடுவதன் வாயிலாக, இந்நோய் தாக்கத்தை தவிர்க்கலாம் என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க....


தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு முக.ஸ்டாலின் வெளியிட்டார்!!


புதியதாக நெற்பயிருக்குக் காப்பீடு செய்ய - விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கர்க்கு ரூ.31,000 இழப்பீடு!!


விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் சிறுதானிய பயறு விதைகள் வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family.

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post