விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் சிறுதானிய பயறு விதைகள் வேளாண்துறை அறிவிப்பு!! நிலக்கடலை, பாசிபயறு, தட்டைப் பயறு விதைகள் - 50%மானியத்தில் விற்பனை!
நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் சிறுதானியங்களின் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிக மகசூல்
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மானாவாரி காடுகளில் உழவு முடித்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். எனவே இந்தச் சூழலில் சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களையும் அல்லது தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு சாகுபடி செய்து, அதிக மகசூல் ஈட்டுவதுடன், நல்ல லாபமும் பெற முடியும்.
விதைகள் கையிருப்பு
குறிப்பாகத் தேனீ மாவட்டம் சின்னமனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து, கம்பு விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளன. எனவே இவற்றை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 50% மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
விதை நேர்த்தி மற்றும் நோய்த்தாக்குதல்
வேளாண்மையின் அடிப்படை இடுபொருளான விதை தரமானதாகவும், முளைப்பு திறன் மிக்கதாகவும் இருப்பதற்கு விதை நேர்த்தி என்பது மிக அவசியமாகும். இவ்வாறு செய்வதால் நோய் தாக்குதலில் இருந்து எளிதில் பாதுகாக்கலாம்.
அதேநேரத்தில் அதிக மகசூல் பெறவும் உதவுகிறது. ரசாயனம் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்வதினால் பயிர்கள் பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் மாசடைந்து நமது உடலுக்கும் கேடு விளைவிக்கிறது.
இன்று பெரும்பாலான விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலத்தை பேணவும் இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்து வருகின்றனர்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விதை நேர்த்தியின் பயன்கள்
1. முளைப்புத் திறனை மேம்படுத்தும்.
2. பூஞ்சாண மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்.
3. விதை அழுகல் மற்றும் நாற்று அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயலும்.
மேலும் படிக்க....
PM Kisan Tractor Yojana: விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு அரசு 50% மானியம்! தவறவிடாதீர்கள்!!
Kisan Credit Card கடன் திட்டம் புதிய மேம்படுத்தல்: திட்டத்தின் புதிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்!!
குறுவை நெல்லைப் பாதுகாக்க- 50% மானியத்தில் தார்பாய்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...