குறுவை நெல்லைப் பாதுகாக்க- 50% மானியத்தில் தார்பாய்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!
தமிழகத்தின்
பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைக் கருத்தில்கொண்டு, குறுவை நெல்லைப் பாதுகாக்க
50% மானியத்தில் தார்பாய்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.
தொடரும் பருவமழை
வளி மண்டல மேலடுக்கு
சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில்,
குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனிடையே குறுவை நெல்
கொள்முதல் பணிகளும் நடைபெற்று வருகிறது.
50% மானியத்தில்
தார்பாய்கள்
இதையடுத்து,
அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை விவசாயிகள் பாதுகாக்க ஏதுவாக, 50 சதவிகித மானிய விலையில்
தார்பாய்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்திருப்பது.
1,100 தார்பாய்கள்
இலக்கு
எனவே, அறுவடை
செய்த குறுவை நெல்லை மழையிலிருந்து பாதுகாக்க வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம்
மானியத்தில் விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர்
மாவட்டத்துக்கு நிகழாண்டு 1,100 தார்பாய்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில்
நடவு செய்யப்பட்ட குறுவை நெல் தற்போது அறுவடைக்கு வந்த நிலையில் தொடர் மழையாலும், விட்டுவிட்டு
மழை பெய்வதாலும் நெல்லை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் தொடர்புக்கு
எனவே, விவசாயிகள்
தங்களுக்குத் தேவையான தார்பாய்களை 50 சதவிகித மானியத்தில் பெற்று பயனடைய தொடர்புடைய
வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
மண்ணின் வளத்தை அதிகரித்து அதிக மகசூல் பெற பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!!
குறைந்த நாளில் அதிக லாபம் தரும் வாத்து வளர்ப்பு!! வாத்து வளர்ப்பு என்றால் என்ன?
தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய மானியம் தங்கள் பெயா்களை பதிவு செய்ய அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...