பசுந்தளை உரப்பயிர் இட்டு மண்ணின் தழைச்சத்தின் அளவை அதிகரித்து மண்வளத்தை பெருக்குங்கள்!!


நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து நெற்பயிர் ஒரு போகம் அல்லது இரண்டு போகம் சாகுபடி செய்து வருவதாலும், இயற்கை சீற்றங்களால் இம்மாவட்டங்கள் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுவதாலும், பொதுவாக மண்ணில் கரிமப் பொருட்களின் அளவும், தழைச்சத்தின் அளவும் குறைவாக உள்ளது. இதனை சரி செய்திட பசுந்தாள் மற்றும் பசுந்தளை உரப்பயிர் இட்டு உழவு செய்வது மிகவும் அவசியம்.



பசுந்தாள் உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்கள்


1. பசுந்தாள் மற்றும் பசுந்தளை உரம் இட்டு வயலில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் தழைச்சத்தினை அதிகரிக்கலாம்.


2. இரசாயன உரங்களை தொடாந்து இட்டதால் மண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சீர் செய்திடலாம்.


3. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மண்ணின் பொலபொலப்பு தன்மை அதிகரிக்கும்.


4. மண்ணில் நுண்ணுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாகப்பெருகும்.


5. மண்புழுக்கள் எண்ணிக்கை உயரும். மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கலாம். மண் அரிமானத்தினை தடுத்திடலாம்.


6. தக்கை பூண்டு தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணின் களர் தன்மை முற்றிலும் மாறும்.


தக்கை பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, சணப்பு ஆகிய குறைந்த வயதில் அதிக தழைச்சத்தை தரவல்ல வறட்சி தாங்கும் தன்மையுடைய பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து வயலில் மடக்கி உழுவு செய்திட வேண்டும்.



பசுந்தாள் உரப்பயிர் வளர்க்க முடியாவிட்டால் வயல் வரப்பு மற்றும் இதர இடங்களில் தானாகவே வளர்ந்துள்ள கொளுஞ்சி, ஆவாரை, சுபாபுல், எருக்கு, வேம்பு மற்றும் புங்கம் ஆகியவற்றின் கிளைகளை வெட்டி வயலில் இட்டு மக்கும் படி மடக்கி உழுது பசுந்தளை உரமாக பயன்படுத்திடலாம்.


தற்சமயம் பெய்து வரும் பருவ மழையினை பயன்படுத்திப பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மடக்கி உழவு செய்தும், அல்லது பசுந்தளை கிளைகளை வெட்டி வயலில் இட்டு நீர் கட்டி வைத்திருந்து 10 நாட்கள் கழித்து உழவு செய்தும், மண்ணின் வளத்தை அதிகரித்து அதிக மகசூல் பெற்றிடுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


குறைந்த நாளில் அதிக லாபம் தரும் வாத்து வளர்ப்பு!! வாத்து வளர்ப்பு என்றால் என்ன?


தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய மானியம் தங்கள் பெயா்களை பதிவு செய்ய அழைப்பு!!


விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் உழவை எளிதாக்கும் டாப் 4 விவசாய இயந்திரங்கள்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPSன்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post