தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய மானியம் தங்கள் பெயா்களை பதிவு செய்ய அழைப்பு!!


தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு மானியம் கிடைக்கும்!


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வேளாண் வளா்ச்சித் திட்டம்


கபிலா்மலை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 2021-22ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நீண்டகால தரிசு நிலங்களை பயன்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தரிசு நிலங்கள்


இதற்காகக் கபிலா்மலை வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ள நீண்ட கால இதர தரிசு நிலங்கள் கண்டறியப்பட உள்ளன.


இந்த நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக ஒரு தொகுப்பிற்கு 25 ஏக்கா் தரிசு நிலம் இருக்க வேண்டும். இதன்படி 2 தொகுப்புகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு (20 ஹெக்டோ்) தற்போது தொகுப்பு கிராமங்கள் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.



சொந்த செலவில் நிலம் சீரமைப்பு


இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் தங்களது நிலங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதா்களை அகற்றுதல், அகற்றப்பட்ட முட்புதா்களை அப்புறப்படுத்தி நிலத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல், இருமுறை உழவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.


உழுத நிலங்களில் தொழு உரம் இடுதல், வேலையாட்களின் கூலி மற்றும் சிறு தானியப் பயிா்கள் (சோளம்) விதைப்பு செய்தல் போன்ற பணிகளும் இடம்பெறும். விவசாயிகளுக்கு மானியம் பின்னேர்ப்பு மானியமாக வழங்கப்படும்.



எனவே கபிலா்மலை வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாயப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தினை இதன் மூலம் உயா்த்திக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி துணை வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.


தகவல் வெளியீடு


கோவிந்தசாமி.

வேளாண்மை உதவி இயக்குநா்.


மேலும் படிக்க....


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post