மானிய விலையில் நெல் விதைகள்!! பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு!!


தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.



உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் உளுந்து, கம்பு ,கொண்டைக்கடலை பயிர்களுக்கு செயல் விளக்க திடல் அமைத்தல், நுண்ணூட்ட உரம் வழங்கல்,சிறு தானியங்கள், பயிறு வகைகள், உயிரி பூச்சிக்கொல்லி வழங்குதல், கைத்தெளிப்பான் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.


மானியத்தில் உதவிகள்


1. மேலும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நெல் விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.


2. தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் பூச்சி நோய் தாக்கி மகசூல் குறைவான மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய கன்றுகள் நடவும் மானியம் வழங்கப்படுகிறது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


3. மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்த உயிரி பூச்சிக்கொல்லிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.


4. வரப்பு பயிர் சாகுபடிக்காக உளுந்து,பச்சைப்பயிறு விதைகள் உள்ளன.


5. பசுந்தாள் உரம்,தக்கைப்பூண்டு விதைகள் உள்ளன.



விவசாயிகளுக்கு அழைப்பு


ஆலம்பாளையம்,குருப்பநாயக்கனூர், தும்பலப்பட்டி, மொடக்குப்பட்டி, குறுஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் உழவை எளிதாக்கும் டாப் 4 விவசாய இயந்திரங்கள்!


மாடுகளில் மீட்டு இனப்பெருக்கம் ஓர் கண்ணோட்டம்!! மீட்டு இனப்பெருக்கத்தின் காரணங்கள்!!


விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசு!! பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 35 வகையான சிறப்பு பயிர்கள் பரிசு!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......


வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post