மாடுகளில் மீட்டு இனப்பெருக்கம் ஓர் கண்ணோட்டம்!! மீட்டு இனப்பெருக்கத்தின் காரணங்கள்!!


மீட்டு இனப்பெருக்கம்


கறவை மாடுகளில் மீட்டு இனப்பெருக்கம் என்பது அதன் பருவக்காலத்தில் ஒரு முறையாவது கன்று ஈன்றிருக்க வேண்டும். வழக்கமான பருவசுழற்ச்சி கொண்டவையாக இருக்க வேண்டும். இயல்பான இனப்பெருக்கப்பாதை கொண்டிருக்க வேண்டும். பத்து வயதுக்குள் இருக்க வேண்டும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேர்க்கைக்குப் பிறகும் கருத்தரிக்காமல் இருக்கும் நிலைமீட்டு இனப்பெருக்கம் எனப்படும்.


மீட்டு இனப்பெருக்கத்தின் காரணங்கள்


மீட்டு இனப்பெருக்கத்தினை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கான காரணிகளை கண்டறிய வேண்டும். ஆனால் கால்நடைகள் சினைப்பிடிக்க இயலாமைக்கு மற்றும் கருத்தரிக்காமைக்கு எண்ணற்ற காரணிகள் இருப்பதால் இதற்கான காரணத்தை எளிதில் கண்டறிய இயலாது.



1. சரியான முறையில் பருவகாலத்தை கண்டறியாமை.


2. கால்நடை பருவத்தில் இல்லாதபோது, செயற்கைமுறை கருவூட்டல் செய்தல்.


3. பருவகாலமும் மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் நேரமும் ஒவ்வாமை.


விந்துதிரவம் மற்றும் கருவூட்டல் முறைகள்


1. விந்துதிரவத்தின் போதியதிறமின்மை (கருமுட்டையை கருத்தரிக்க) போதிய அளவில் விந்துக்களின்மை.


2. முறையற்ற கருவூட்டல், மலட்டு காளை, ஊட்டச்சத்து குறைபாடு, சினைகருப்பை அழற்சி மற்றும் கருப்பை உள் சவ்வு நோய்.


3. கருப்பைவாய் அழற்சி மற்றும் இனப்பெருக்கப் பாதையின் வீக்கம், நாளமில்லாசுரப்பிகளின் குறைபாடுகள், சூலகக் கட்டிகள்.



4. தாமதிக்கப்பட்ட கருமுட்டை வெளியேற்றம், சினைமுட்டை வெளியேறுவதில் குறைபாடுகள், சுருங்கிய கருகுழாய், குறைபாடுடைய கருமுட்டை, இனப்பெருக்கப் பாதையின் உள்ளமைப்பு குறைபாடுகள், இளம் வளர்கரு இறப்புகள்

 

பெரும்பாலும் இயல்பான இனப்பெருக்கப் பாதை கொண்ட கறவை மாடுகள் 25 முதல் 35 சதவிகித கருமுட்டைகள் சேதமாகவே அல்லது உடைந்தோ காணப்படுகிறது. மேலும் சரியான தருணத்தில் செயற்கைமுறை கருவூட்டல் செய்யாததால் கரு உருவாவதில்லை. ஆகையால் பெரும்பாலான கருவுறா விலங்கினம் மலட்டுத்தன்மையாக இருப்பதில்லை. 


மிககுறைந்த அளவில் கருத்தரிக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. பருவக் காலத்தை சரியான நேரத்தில் கண்டறியாமையே மீட்டு இனப்பெருக்கத்தின் முக்கிய காரணமாகும். எனவே, கால்நடைகள் பருவகாலத்தின் அறிகுறிகளை கணக்கிட்டு பின் செயற்கைமுறை கருவூட்டல் செய்வதன் மூலம் மீட்டு இனப்பெருக்கதை தவிர்க்கலாம். 


இயற்கையான முறையில் சேர்க்கை செய்யும் வேளையில் காளைகளை இனப்பெருக்க சோதனைக்கு உட்படுத்துவது அவசியம். சில நேரங்களில் காளைகள் நோய்தொற்று கிருமிக்குள்ளாகி உள்ளனவா என சரியான அளவில் நமக்கு தெரியவராது. அதன் பொருட்டு கால்நடை உற்பத்தியாளர்கள், கால்நடை மருத்துவர் அலோசனை பெற்று செயற்கைமுறை கருவூட்டல் செய்து கொள்வது நல்லது.


மீட்டு இனப்பெருக்கத்தின் மேலான்மை


1. சரியான முறையில் பருவகாலத்தை கண்டறிதல் அல்லது பருவக்காலத்தை கண்டறியும் உபகரணங்கள் பயன்படுத்துதல். சரியான பருவகாலத்தில் செயற்கைமுறை கருவூட்டல் செய்தல்.



2. உரைவிந்தின் திறனை அவ்வபோது சோதித்துக் கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவர் ஆலோசனை படி செயற்கைமுறை கருவூட்டல் செய்து கொள்வது.


3. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்வது மற்றும் தாது உப்புக்களை பயன்படுத்துதல்.


4. சினைகருப்பை அழற்சி, கருப்பை உள் சவ்வு நோய் கருப்பைவாய் அழற்சி மற்றும் இனப்பெருக்கப் பாதையின் வீக்கம் போன்றவற்றிற்க்கு சிகிச்சை அளித்த பின்பு ஒரு பருவம் தவிர்த்து செயற்கைமுறை கருவூட்டல் செய்து கொள்வது.


5. நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகள் அறிந்து அவற்றிற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் சினைபருவ தூண்டல் அல்லது சினைபருவ ஒருங்கிணைப்பு செய்வதன் முலம் மீட்டு இனப்பெருக்கத்தினை சரி செய்து வருடம் ஒரு கன்றினைப் பெறலாம்.


மேலும் விபரங்களுக்கு, மருத்துவர் இரா.அருண், முனைவர் இரா.உமாராணி, மருத்துவர் க.அருளானந்தம், முனைவர் சி.சௌபரண்யா மற்றும் முனைவர் இரா.பு.விஷ்ணுராகவ், கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி-625 602.


மேலும் படிக்க....


கோமாரி நோய் தாக்கிவிட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கான எளிய மருத்துவம்!!


கால்நடைகளில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள்!! ஓட்டுண்ணிகள் வராமல் தடுக்க பொதுவான பண்ணை பராமரிப்பு முறைகள்!!


மாட்டு சாணத்திலிருந்து மரக்கட்டைகள் தயாரித்து லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post