கால்நடைகளில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள்!! ஓட்டுண்ணிகள் வராமல் தடுக்க பொதுவான பண்ணை பராமரிப்பு முறைகள்!!
கால்நடைகளில் ஒட்டுண்ணிகளை வெளிப்புற மற்றும் உட்புற ஒட்டுண்ணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த ஒட்டுண்ணிகள் கால்நடைகளுக்கு நேரிடையாக பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சில ஒட்டுண்ணிகள் மேலும் பல நோய்களை கால்நடைகளுக்கு பரப்புவதில் பங்கு கொள்வதால் கால்நடைகளில் பொருளாதார பாதிப்புகள் அதிகம் ஏற்பட நேரிடுகிறது.
அதனால் கால்நடைகளை வளர்ப்போர் ஒட்டுண்ணிகளைப்
பற்றி தெரிந்து தகுந்த தடுப்பு முறைகளைத் தெரிந்து தமது பண்ணைகளில் கடைபிடிப்பதன் மூலம்
கால்நடைகளின் ஆரோக்கியம் பேணப்படுவதுடன் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பை
தடுக்க முடியும்.
வெளிப்புற ஒட்டுண்ணிகள்
சிறு ஈக்கள்
இவை வீட்டு ஈக்களை விட மிகச்சிறியவை. சாம்பல் நிறம் கொண்டவை. இவ்வகை ஈக்கள் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஏதேனும் தெந்தரவு ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது பறந்து, பின் மீண்டும் மாட்டிடமே வந்து ஒட்டிக் கொள்ளும். இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்களைத் தேடிச் செல்லும்.
மற்ற நேரங்களில்
மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில் 20 – 30 இடங்களில் துளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு
மிகுந்த இரத்த இழப்பு ஏற்படும்.
முக ஈக்கள்
வீட்டு ஈக்கள்
போலவே இருக்கும். இவை கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய்,
உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும். இவை இரத்தத்தை உறிஞ்சுவதில்லை.
ஆனால் வெளிர்சிவப்புக் கண் நோயைப் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைப் பரப்புகிறது. இந்த
ஈக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்.
மாட்டு ஈக்கள்
இவை அளவில்
வீட்டு ஈக்களை விடப் பெரியவை. இது கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு மாட்டிலிருந்து இரத்தத்தை உறிஞ்சி வயிற்றை நிரப்பிக்
கொண்டு, நிழலான இடங்களில் சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும்.
உண்ணிகள்
இவை இரத்தத்தை
அதிகளவு உறிஞ்சுவதோடு மாடுகளுக்கு பல நோய்களைப் பரப்புவதில் உறுதுணையாகின்றன. எனவே
உண்ணிகளை உண்ணி நீக்க மருந்து கொண்டு தடுப்பது மிக முக்கியமானதாகும்.
பேன்கள்
காதுகளைச் சுற்றி
அதிகமாகக் காணப்படும். தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுடன் தோல் அரிப்பு மற்றும்
எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து காணப்படும். எனவே
குளிர்காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். 3 வாரங்கள்
தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லையெனில் சில முட்டைகள் சாகாது.
சொறிப்பூச்சி
இது தோல் நோயைத்
தோற்றுவிக்கிறது. இத்தோல் நோய் சார்கோப்டிப் கோரியோப்டஸ் மற்றும் டெமோடெக்ஸ் பூச்சிகளால்
ஏற்படுகிறது. இது தொடர்பு மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது. இதனால்
பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இந்த பூச்சிகள் குழிகளில்
மறைந்து கொள்ளுவதால் கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை
தொடர்ந்து உபயோகித்து நீக்கலாம்.
உட்புற ஒட்டுண்ணிகள்
கால்நடைகளின்
உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் போன்றவைகள் கால்நடைகளின்
ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன. இத்தகைய ஒட்டுண்ணிகள், கால்நடைகளின்
இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது கால்நடைகளுக்குச் சேரவேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ
அல்லது உட்கொள்ளப்படும் உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப்
பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ கால்நடைகளின் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய் அறிகுறிகள்
கால்நடைகள்
சரிவர தீவனம் உட்கொள்ளாது நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும். பற்களை அடிக்கடி
நற, நறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல்,
வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும். தக்க சமயத்தில்
சிகிச்சை அளிக்காவிடில் கால்நடைகள் இறந்துவிடும்.
ஓட்டுண்ணிகள்
வராமல் தடுக்க பொதுவான பண்ணை பராமரிப்பு முறைகள்
1. ஒட்டுண்ணிகளைக்
கட்டுப்படுத்த முதலில் பண்ணையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. சாணம் மற்றும்
பண்ணைக் கழிவுகளை உடனடியாக பண்ணையிலிருந்து நீக்கி உரக்குழியில் போட்டு மூடி வைக்க
வேண்டும்.
3. சாணத்தை பண்ணையின்
ஓரத்திலேயே சேமித்து வைக்கக் கூடாது.
4. ஈக்கள் மற்றும்
கொசுக்களின் பெருக்கத்தை தவிர்க்க கொட்டகையைச் சுற்றி நீர்த்தேங்காதவாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.
5. கொட்டகையைச்
சுற்றியுள்ள புதர்ச்செடி மற்றும் களைச் செடிகளை நீக்கி விட வேண்டும்.
6. வாரம் ஒரு முறை
வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் கலந்து புகை மூட்டம் போட வேண்டும்.
7. வாரம் ஒரு முறை
சுமத்தியான் அல்லது மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மிலி என்ற அளவில்
கலந்து பண்ணையைச் சுற்றி தெளிக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பிறந்த ஆடு மற்றும் கன்றுக் குட்டிகளுக்கு முதலில் 7 முதல் 10 நாட்களில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பிறகு மாதம் ஒரு முறை வீதம் 6 மாதங்கள் வரை குடற்புழு மருந்து கொடுக்க வேண்டும்.
பிறகு ஆடுகளுக்கு
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கன்றுகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு
நீக்க மருந்து கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர் ஆரோசனைப்படி கால்நடைகளின் உடல்எடைக்குத்
தக்கவாறு கால்நடைகளின் தன்மைக்கேற்ப தகுந்த குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.
கால்;நடை வளர்ப்போர் தாமாகவே மருந்தகங்களுக்குச் சென்று வாங்கி கொடுப்பதை தவிர்க்க
வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை வெளிப்புற ஒட்டுண்ணிகளுக்கு உண்ணி நீக்க மருந்தை உண்ணிகளின் பாதிப்பைப் பொறுத்து
கால்நடைகளின் உடம்பில் தடவும் மருந்து அல்லது ஊசி மூலம் செலுத்தும் மருந்தை கால்நடை
மருத்துவரின் உதவியுடன் கொடுக்க வேணடும். பூட்டாக்ஸ் என்ற மருந்தை 1 லிட்டருக்கு 2
மில்லி என்ற அளவில் கலந்து பண்ணை மற்றும் பண்ணையைச் சுற்றியுள்ள உண்ணி தங்கும் செடி,
புதர், சுவற்றின் கீரல், ஓட்டை, சந்து போன்றவற்றில் மருந்தைத் தெளிக்கவேண்டும்.
1. போதிய ஊட்டச்சத்து
அளிக்கவேண்டும்.
2. தண்ணீர், தீவனம்,
புல் போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும்.
3. மற்ற பண்ணை
கால்நடைகளோடு கலப்பதை தவிர்க்க வேண்டும்.
4. வெளியிலிருந்து
புதிதாக வாங்கி வரும் கால்நடைகளை குறைந்தது 10 நாட்கள் தனியே வைத்து பராமரித்து நோய்
இல்லையெனில் பண்ணையில் அனுமதிக்க வேண்டும்.
5. நோயுற்ற கால்நடைகளை
உடனே கண்டறிந்து கால்நடை மருத்துவரின் உதவியோடு தாமதம் செய்யாமல் தகுந்த சிகிச்சை அளிக்க
வேண்டும். தகுந்த சிகிச்சை, கூடுதல் தீவனம், நல்ல பராமரிப்பு போன்றவற்றை வழங்கினால்
கால்நடைகளை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றி விடலாம்.
6. நோயுற்ற கால்நடைகளை
பிரித்து தனியே பராமரிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
டாக்டர் இரா.உமாராணி, இரா.அருண், செ.சௌபரண்யா மற்றும் க.அருளானந்தம், கால்நடை சிகிச்சை
வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி.
மேலும் படிக்க....
நெல் சாகுபடி – இயந்திரமயமாக்குதல் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகம்!!
மாட்டு சாணத்திலிருந்து மரக்கட்டைகள் தயாரித்து லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்!!
விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசு!! பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 35 வகையான சிறப்பு பயிர்கள் பரிசு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...