இயற்கை விவசாயத்தில் தேமோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் வழிமுறைகள்!!
சேலம் மாவட்டம்,
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), ம.மலர் கொடி,
ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.சுகன்யா கண்ணா, ஆகியோர் தெரிவித்ததாவது,
தேமோர் கரைசல் என்றால் என்ன?
தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல்.
இயற்கை விவசாயத்தில்
தேமோர் கரைசலின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேமோர் கரைசல் சிறந்த
வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும், வைரஸ் நோயை கட்டுப்படுத்தக்கூடிய கரைசலாகவும்
செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்
1. புளித்தமோர்
– 5 லிட்டர்,
2. தேங்காய்ப்பால்
– 1 லிட்டர்,
3. தேங்காய்துருவல்
– 10 தேங்காய்,
4. அழுகியபழங்கள்
– 10 கிலோ.
தயாரிப்பு முறை
1. புளித்தமோர்
மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாக ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு,
நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.
2. இவற்றுடன்
10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில்
போட வேண்டும்.
3. தினமும் கரைசலைக்
கலக்கி வர வேண்டும்.
4. 7 நாட்களில்
தேமோர்க்கரைசல் தயாராகி விடும்.
பயன்படுத்தும்
முறை
8ம் நாள், ஒரு
லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது
மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
நன்மைகள்
1. தேமோர்க் கரைசல்
என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.
2. பயிர்களில்
பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள்அதிகமாகப்பூக்கும்.
3. இக்கரைசல் தெளிக்கப்பட்டு
விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாகஇருக்கும்.
அரப்புமோர்
கரைசல்
தேவையான பொருட்கள்
1. புளித்த மோர்
– 5 லிட்டர்,
2. இளநீர் – 1
லிட்டர்,
3. அரப்பு இலைகள்
– 1 முதல் 2 கிலோ,
4. 500 கிராம்
பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.
தயாரிக்கும்
முறை
1. அரப்பு இலைகளை
நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
2. பின்னர் இதனுடன்
புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. இந்த கரைசல்
கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒரு வார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
4. இந்த ஒரு வரா
காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல்ஆகும்.
5. அரப்பு இலை
தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழசாறு பயன்படுத்த வேண்டும்.
நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும்.
பயன்படுத்தும்
முறை
1 லிட்டர் அரப்பு
மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
1. அரப்பு மோர்
கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.
2. இது தாவர வளர்ச்சிக்கு
உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.
3. அரப்பு மோர்
கரைசலை பூப்பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய
பூக்கள் பூக்கும்.
4. அரப்பு மோர்
கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில்
நன்கு வளர்ச்சியடைந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203, 0427 242 2550, 70109 00282, 90955 13102.
மேலும் படிக்க....
நெல் சாகுபடி – இயந்திரமயமாக்குதல் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகம்!!
மாட்டு சாணத்திலிருந்து மரக்கட்டைகள் தயாரித்து லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...