உளுந்து பயிரில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!

 


உளுந்து பயிரில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!


சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் தற்பொழுது விவசாயிகள் அனைவரும் பயறு வகை பயிர்களான உளுந்து பயிர் சாகுபடி செய்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ளார்கள். ஆகையால் விவசாயிகளை ஊக்கபடுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி பின்வருமாறு எடுத்து கூறினார்.


நில மேம்பாடு


நிலத்தை நன்கு உழவு செய்து 1 எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார்கழிவு 12.5 டன் இட வேண்டும்.



விதை அளவு


1 ஹெக்டருக்கு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோ தேவைபடும். கலப்பு பயிராக இருந்தால் 10 கிலோ போதுமானது.


விதை நேர்த்தி


1 கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல் இருக்காது.


விதைப்பு


விதைகளை 30 × 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவ வேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.



ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


உரமிடுதல்


1. பயிர் ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)


2. தழை மணி சாம்பல் கந்தகம்


3. உளுந்து மானாவாரி 12.5 25 12.5 10


4. இறவை 50 50 25 20


5. உளுந்தின் மகசூலை அதிகரிக்க 1மூ யூரியாவை இலைவழியாக தெளித்தல் வேண்டும்.


6. மகசூலை அதிகரிக்க இலைத் தெளிபபாக யு+HPயH 1 மூட்டை விதைத்த 30 மற்றும் 45 நாட்களில் தெளிக்க வேண்டும்.


வறட்சியை தாங்குவதற்கு இலைவழி தெளித்தல்


உளுந்தில் வறட்சி காலத்தில் இடைபருவ மேலாண்மை முறையாக 2 மூட்டை பொட்டாசியம் குளோரைடு. மற்றும் பிபிஎப் எம் பரிந்துரை செய்வதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும்.


நீர் நிர்வாகம்


விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு உயிர் தண்ணீரும் மற்றும் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும்.


கால நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு 1 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.



களை கட்டுபாடு மற்றும் பின் செய்நேர்த்தி


களை முளைப்பதற்கு முன்கு களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் 1 எக்டருக்கு 500 லி 20ம் நாளில் தெளிக்க வேண்டும்.


ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் களைக் கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த 15 மற்றும் 30 வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.


அறுவடை செய்தல்


முதிர்ந்த காய்களை பரித்து உலர்த்த வேண்டும். வேரோடு பிடுங்கவும் அல்லது முழு தாவரத்தையும் வெட்டி எடுக்கவும். குவித்து வைத்த உலர்த்தவும் வேண்டும்.


அறுவடை பின்சார் தொழில் நுட்பம்


பதபடுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல்


பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும் என விரிவாக எடுத்து கூறபட்டது. விவசாயிகள் பயறு வகை பயிர்களில் மகசூலை அதிகபடுத்த மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் அம்சவேணி விரிவாக எடுத்து கூறினார்.

 

மேலும் படிக்க....


நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!


நெல், வெங்காய பயிர்களுக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு!!


மழை காலத்திற்கு பின் நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

Post a Comment

0 Comments