நெல், வெங்காய பயிர்களுக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு!!



நெல், வெங்காய பயிர்களுக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு!! 


பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுரை


நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் சூழல் உள்ளதால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள நெல், வெங்காயப் பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்துகொள்ளும்படி ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.


மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு


இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நெல்-II (சம்பா) பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதல், ஆகிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



மேலும் அதில் கூறி இருப்பதாவது நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல்-II (சம்பா) மற்றும் வெங்காயம்-II பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, நெல்-II (சம்பா) 21 பிர்காக்களிலும் மற்றும் வெங்காயம்-II 6 பிர்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது.


கடன் பெறும் மற்றும் கடன்  பெறாத விவசாயிகள் பதிவு


கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.


காப்பீடு செய்ய கடைசி தேதி மற்றும் ப்ரீமியம்


இத்திட்டத்தில், நெல்-II (சம்பா) பயிருக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள்ளும், வெங்காயம்-II பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.519 பிரீமியம் மற்றும் வெங்காயம் – பயிருக்கு ரூ.1,920 பிரீமியம் செலுத்த வேண்டும்.



தேவைப்படும் விண்ணப்பங்கள்


பயிர் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், விதைப்பு சான்றிதழ், செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்த வேண்டும்.






மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


கூடுதல் விபரம் அறிய


இதுகுறித்த விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலக அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான 26 மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு!!


பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்யக் காலக்கெடு நீட்டிப்பு- முதல்வர் உத்தரவு!


பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கருக்கு ரூ.52,000 வரையில் இழப்பீட்டுத் தொகை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments