வயல்களில் பூச்சி கட்டுப்பாடு மேலாண்மை! விவசாயிகள் அறிய வேண்டிய செயல்முறைகள்!!
பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்துவதால் பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளின் எதிர்ப்புத் தன்மை உருவாவதால் திடீர் இனப்பெருக்கம், மறு உற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துபோதல்,
சுற்றுசூழல் சீர்கேடு, தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் சீழ்படிவு தங்குதல் போன்ற
பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்திட மாற்று
வழிகளை கடைபிடித்தல் அல்லது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது சிறந்ததாகும்.
நுண்ணுயிர்
சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு – சிறு தொகுப்பு
மெட்டாரைசியம் அனிசோபிலியே பூஞ்சானம், வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க வெர்ட்டிசீலியம் லெக்கானி, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. பெவேரியா பேசியானா, தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை).
மெட்டாரைசியம்
அனிசோபிலியே
இது, வண்டுகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பச்சைப் பூஞ்சணம் எனவும் அழைக்கப்படுகிற இது, தண்டுத்துளைப்பான், வைரமுதுகுப்பூச்சி, காண்டாமிருக வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளில் உள்ள ஈக்களைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். வேர்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், கருவண்டு, வெள்ளை ஈக்கள், கொடிவகைப் பயிர்களைத் தாக்கும் வண்டுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.
இதன் மூலம் காண்டாமிருக வண்டை, அதன் புழுப்பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம். எருக்குழிகளிலிருந்து இந்த வண்டு வளர்கிறது. எருக்குழிகளில் கடப்பாறையால் குழியெடுத்து, இந்தப் பூஞ்சணத்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்ற வேண்டும். இந்தப் பூஞ்சணம் வண்டுகள் மற்றும் பூச்சிகளின் தோல் மீது படர்ந்து, வளர்ந்து உள்ளே ஊடுருவிச் செல்லும்.
பூச்சிகளின் உடம்பில் இருக்கும் திரவத்தை, இந்தப் பூஞ்சணம் மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கும். இதனால் பூச்சிகள், வண்டுகள் ஒருவித தள்ளாட்டத்துடன் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் இறந்துவிடும். இந்தப் பூஞ்சணம் தானியங்கள், பயறுவகைப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி போன்றவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
இதை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம்
எடுத்துக்கொண்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மண்ணில் இடுவதாக இருந்தால்,
ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சணத்துடன், 50 கிலோ தொழுவுரத்தைக் கலந்து நிலத்தில்
தூவலாம். மாதம் ஒருமுறை இந்தப் பூஞ்சணத்தைத் தெளித்துவந்தால், மேலே சொன்ன பெரும்பாலான
பூச்சிகள், வண்டுகள் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.
வெர்ட்டிசீலியம்
லெக்கானி
இந்தப் பூஞ்சணம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சணத்தை 200 லிட்டர்
தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்க நினைப்பவர்கள்,
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம். சொட்டுநீரில் கொடுக்கும்போது
கரைசலை நன்றாகக் கரைத்து, வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.
பெவேரியா பேசியானா
நாற்றாங்காலில்
தோன்றக்கூடிய இலைசுருட்டு புழுவின் தாக்குதலை குறைக்க 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்
பெவேரியா பேசியானா என்ற உயிர் பூச்சிக்கொள்ளியினை அதிகாலை கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பதால்
புழுக்களின் மீது நோய் உருவாகி புழுக்கள் அழிந்து போகும்.
இதனை இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று (ம) அங்ககச்சான்று உதவி இயக்குனர், சக்திகணேஷ் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
PM Kisan: 10வது தவணையுடன் மேலும் மூன்று வசதிகள்! 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய்!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...