நெற்பயிரை தாக்கும் இலையுறை கருகல் நோய் பயிரைக் பாதுகாக்க வழிமுறைகள்!!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் தற்போது மழை பெய்து கொண்டி இருப்பதாலும், இனி வரும் காலம் பனி காலம் என்பதாலும், இலையுறை கருகல் நோய் அதிகம் தாக்காமல் இருக்க நோய் கண்டு அறியும் முறைகள், கட்டுபடுத்தும் தொழில்நுட்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்களை இலையுறை
கருகல் நோய் இருந்து தங்களது நெற்பயிரைப் பாதுகாக்க விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளை
கையாள வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.
இலையுறை கருகல்
நோய் பரவும் முறைகள்
ரைசோக்டோனியா
சொலானி (பூசண நோய்)
1. இந்நோய் மண்
மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது.
2. இப்பூசணம் இளமையாக
இருக்கும் போது நிறமில்லாமலும், பின் முதிர்ச்சி நிலையில் மஞ்சளான பழுப்பு நிறமுடனும்
காணப்படும்.
3. இப்பூசணம் அதிக
அளவிலான உருளை வடிவ இழை முடிச்சுகளை உருவாக்கிறது. முதலில் வெண்மையாகவும், பின் பழுப்பு
நிறம் அல்லது ஊதா நிற பழுப்பாகவும் மாறி விடும்.
இலையுறை கருகல்
நோய் அறிகுறிகள்
பயிரின் தூர் வைக்கும் பருவத்திலிருந்து பூட்டைப் பருவம் வரை பயிர்களை தாக்குகிறது. நீர் மட்டத்திற்கு அருகில் இருக்கும் இலையுறைகளில் நோயின் முதன்மை நிலை அறிகுறிகள் காணப்படும்.
இலையுறையின் மேல் முட்டை வடிவம் அல்லது நீள்வட்ட வடிவ அல்லது வடிவமற்ற பச்சை கலந்த சாம்பல் நிற புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் பெரிதாகும் போது, நடுப்பகுதி சாம்பலான வெள்ளை நிறமாகவும் அதன் ஒரங்கள் ஒழுங்கற்ற கரும்பழுப்பு அல்லது ஊதா பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.
பயிரின் மேல்பகுதியிலுள்ள புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அனைத்து தூர்களிலிருந்து கண்ணாடி இலைவரை காணப்படும். தீவிர தாக்குதலின் போது பயிரின் அனைத்து இலைகளும் கருகிப்போய் இறந்துவிடும்.
முடிவில் முழு பயிரும் இறக்க நேரிடுகிறது. இந்நோய் தாக்குதல் இலையின் உள் உறைகள் வரை பரவிச் சென்று முழுபயிரும் இறக்க நேரிடுகிறது. முதிர்ந்த பயிர்கள் இந்நோய் அதிகமாய் (எளிதில்) இலக்காகும் தன்மை கொண்டவை. குறிப்பாக ஐந்து முதல் ஆறு வாரங்களான இலையுறைகளே அதிகமாய் பாதிக்கப்படுகின்றன.
பயிரின் முன் பூட்டைப் பருவம் மற்றும் தானிய நிரப்புதல்
ஆகிய வளர்ச்சிப் பருவங்களில் இந்நோய் அதிகமாய் தாக்கப்படுகின்றன. அதனால் தானிய நிரப்புதல்
பாதிக்கப்படுகிறது. பூங்கொத்தின் கீழ்பகுதியில் தானியங்கள் முழுமையாக நிரப்பாடமல் இருக்கும்.
முழு இலையுறையும்
அழுகி பாதிக்கப்பட்ட இலையை இலேசாக இழுத்தாலும் கையோடு வந்து விடும். நோய் தாக்கிய நிலையில்
மணிகள் பதராகிவிடும்.
இலைக்கருகல்
நோய்க்கு ஏற்ற காரணிகள்
1. இழை முடிச்சு அல்லது நோய் தாக்கப்பட்ட திறள் நீரில் மிதத்தல் மண்ணில் நோய் தாக்கம் இருப்பது.
2. அதிக அளவிலான தழைச்சத்து உரங்கள் இடுவதால் அதிக விதை அளவு அல்லது பயிர் (இடைவெளி குறைவு)நெருக்கமாய் இருத்தல்.
3. 96-100 சதவீதம் ஒப்பு ஈரப்பதம் .28-32 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு, தொடர்ச்சியான மழை.
மேலாண்மை முறைகள்
ஒரு ஏக்கருக்கு
சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் எதிர் உயிரி பூஞ்சான் மருந்தினை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து
நடவு செய்த 30 நாட்கள் கழித்து வயிலில் தூவ வேண்டும்.
பாதிக்கப்பட்ட
வயல்களிலிருந்து தண்ணீரை பிற வயல்களுக்கு பாய்ச்ச கூடாது. தழைச் சத்தினை அதிகமாக இடுவதைத்
தவிர்க்கவும். நோய் இருக்கும் போது மேலுரத்தை தவிர்க்கவும்.
கீழ்கண்ட பூஞ்சான்
கொல்லிகளால் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுபடுத்தலாம். ஏக்கருக்கு புரோப்பிகோனோசோல்
25 நுஊ -200மிலி ஹெக்சகனசோல்-5 நுஊ -400 மிலி , டெபுகோனசோல் 25.9 நுஊ -300 மிலி , வாலிடாமைசின்
3 மூ ளுடு-800 மிலி கார்பன்டாசிம் 50 றுP -100 கிராம் மேற்கொண்ட கண்ட அனைத்து தொழில் நுட்பங்களையும்
விவசாயிகள் கடைபிடித்து நோய் தாக்கதல் இருந்து பயிரை பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க....
தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...