தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!


நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல் சம்பா மற்றும் தாளடி நடவுப்பணி அநேக இடங்களில் முடிவடைந்து விட்டது. ஒரு சில இடங்களில் தாளடி நடவுப்பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர் மழை பெய்வதால் நெல் வயல்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது.


மழை நீர் தேங்கியுள்ள விதைப்பண்ணை வயல்களில் முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 


மழைவிட்ட உடன் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்திட வழி செய்து, அதிக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



இளம் நெற்பயிர்கள் அழுகிப்போவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இளம் பயிர்கள் அழுகிவிட்டால், அதே வயலிலே நெருக்கமாக பயிர் உள்ள இடங்களில் இருந்து பயிரினை களைத்து, அழுகிய இடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கை பராமரித்திட வேண்டும்.


முழ்கிய பயிர்களில் சத்து குறைபாட்டை சரி செய்திட, ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு இரவு வைத்திருந்து, மறுநாள் காலை 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும்.


ஒரு வாரம் கழித்து இலைவழி உரமாக, இரண்டு கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.



மழை நேரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக, பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வயிலினை தொடர் கண்காணிப்பில் வைத்திட வேண்டும்.


நெல் வயல்களில் பறவை அமர்ந்து பூச்சிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக, தென்னை ஓலையின் அடிமட்டையினை பயன்படுத்தி, அடிப்பாகம் மேல்பக்கம் இருக்குமாறு ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 இடங்களில் பறவை இருக்கை அமைத்திட வேண்டும்.


மாலை நேரங்களில் விளக்கு பொறி வைத்து, நெற்பயிரை தாக்கும் புழுக்களின் தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து, அவ்வாறு தென்பட்டால் முன்னேற்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்த்திட வேண்டும்.


பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் தென்பட்டால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி, தாக்குதலை கட்டுக்குள் வைத்திட வேண்டும்.



மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி விதை அலுவலர்களை அணுகிடுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா தெரிவித்தார்.


நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல் சம்பா மற்றும் தாளடி நடவுப்பணி அநேக இடங்களில் முடிவடைந்து விட்டது. ஒரு சில இடங்களில் தாளடி நடவுப்பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர் மழை பெய்வதால் நெல் வயல்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது.


மேலும் படிக்க....


நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர்க்கு ரூ.465/- பீரிமியமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!!


2020-ம் ஆண்டில் ரூ.1.92 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு!! 2019-யை விட 60% குறைவு!!


நெல் – விதைப்பண்ணைகள் அமைத்து கூடுதல் இலாபம் பெற வேளாண்துறை அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.


 

 

  

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post