நெல் – விதைப்பண்ணைகள்
அமைத்து கூடுதல் இலாபம் பெற வேளாண்துறை அழைப்பு!!
மாவட்ட நிர்வாக
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை மற்றும் ஆதாரநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் பெற்றிடலாம்.
கோ 51, ஆடுதுறை 45 மற்றும் ஜோதி போன்ற குறுகிய கால விதை
இரகங்கள் மற்றும் டிகேஎம் 13, என் எல் ஆர் 34449, ஆர்.என்.ஆர் 15048 மற்றும் பிபிடி
5204 போன்ற மத்திய கால விதை இரகங்களை தேர்வு செய்யலாம்.
இணையதளத்தில்
பதிவு செய்ய வேண்டும்
விதை உற்பத்தியாளர்கள் விதைத்த 35 நாட்கள் அல்லது பூப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக விதைப்பண்ணைகளை ஸ்பெக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணை அறிக்கை பதிவிறக்கம் செய்து 3 நகல்களுடன் இராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவுலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விதை உற்பத்தியாளர்கள் விதைப்பு அறிக்கையுடன்
விதை உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சான்று அட்டைகள், விதை வாங்கியதற்கான அசல் ரசீது,
உரிய பதிவு கட்டணம் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு
விதைச்சான்று கட்டணம்
விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் ரூ.25/-ம் வயலாய்வு கட்டணமாக ரூ.60/-ம் விதை பரிசோதனைக் கட்டணமாக ரூ.30/-ம் செலுத்த வேண்டும்.
விதைத்த 35ம் நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது
முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்களுக்கு
அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ
தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.
விதைச்சான்று
அலுவலரால் வயலில் ஆய்வு
பதிவு செய்த
விதைப்பண்ணைகள் பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால்
வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து
பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட வயல்மட்ட விதைகளுக்கு
விதை சுத்தி அறிக்கை வழங்கப்படுகிறது.
விதைப்பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வயல்மட்ட விதைகள் அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்தமான ஒரே மாதிரியான சுத்தி விதைகள் பிரிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக்குவியலுக்கு சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
டான்சிடா திட்டத்தின் மூலம் விதைப்பண்ணை
டான்சிடா திட்டத்தின் மூலம் விதைப்பண்ணை அமைத்த விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு சான்று பெற்ற விதைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே, விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள்
தங்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது உதவி விதை அலுவலர்களை
தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்தால்
விதை உற்பத்தி மானியம் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்.
தகவல் வெளியீடு
இத்தகவலை, இராமநாதபுரம்
மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ், தெரிவித்தார்.
மேலும் படிக்க....
ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் பண்ணையம் அமைத்து லாபம் பெறுவது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...