நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தாயாரிப்பு மற்றும் வளமான நெல் நாற்றுக்கள் பெற வழிமுறைகள்!!


வேளாண்மை உதவி இயக்குநர் அறிவிப்பு


நெல் நாற்றங்காலில் வாளிப்பான நாற்றுகளை வளர்த்து அமோக மகசூல் பெறலாம். இது குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன் தெரிவித்துள்ளதாவது : கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தாயாரிப்பு மற்றும் உழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 


கட்டிடம் கட்டுவதற்கு அடித்தளம் முக்கியமானது போல நெல்லில் நல்ல மகசூல் பெறுவதற்கு திடமான, வாளிப்பான நோயற்ற நாற்றுகளை உருவாக்குவது அவசியம் ஆகும். இதற்கு சில எளிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தலாம்.



நாற்றங்கால் தயாரிப்பு


ஒரு ஏக்கருக்கான நாற்றங்காலுக்கு தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 2 டன்கள் அல்லது பசுந்தாள் உரம் 400 கிலோ இடவேண்டும். கடைசி உழவின் போது ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். டி.ஏ.பி அடி உரமாக இடப்படாவிட்டால், நாற்றுவிட்டு 15 நாட்கள் வரையும் இடலாம். நாற்றங்காலில் பாசிபடர்வதைத் தடுக்க 8 சென்ட் நாற்றங்காலுக்கு 100கிராம் ‘மயில் துத்தம் இடலாம்.


நீர் நிர்வாகம்


விதைத்த மூன்று நாட்களுக்கு வயலில் ஒரு அங்குலம் தண்ணீர் நிறுத்த வேண்டும். வயல் காய்ந்து வெடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


நாற்றங்காலுக்கு ஜிப்சம்


களிமண் அல்லது இறுக்கமான மண்ணில் நாற்றுவிடப்பட்டிருந்தால் நாற்றுப் பறிக்கும் போது வேர்கள் அறுந்து விடும். இதைத் தவிர்க்க ஒரு சென்ட்டுக்கு ஒரு கிலோ என்றளவில் ஜிப்சத்தை இட்டு ஒரு நாள் தண்ணீரை நிறுத்தி அதன் பின்பு நாற்றுக்களைப் பறிக்கலாம்.


நாற்று வேர்களை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்தல்


நாற்றங்காலின் ஒரு மூலையில் சிறிய பாத்தி ஒன்றை அமைத்து அதில் பாதி உயரத்திற்கு நீர் நிரப்ப வேண்டும். ‘அசோஸ்பைரில்லம், ‘பாஸ்போபேக்டர் உயிர் உர பொட்டலங்களை (தலா -2) பிரித்து தண்ணீரில் நன்கு கலந்து, நாற்றுக்களை அதில் அரை மணி நேரம் நனைத்த பின்பு நடுவதால் காற்றிலுள்ள தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. மணிச்சத்தும் கூடுதலாகக் கிடைக்கிறது.



நாற்றின் வயது


செம்மை நெல் சாகுபடியில் (ஒற்றை நெல் நாற்று முறை) 10 நாள் முதல் 17 நாள் வயதான நாற்றுகள் நடப்படுகின்றன. இயந்திர நெல் நடவின் போது 20 முதல் 25 நாள் வயதான நாற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இளம் நாற்றுக்களை நடுவதே, அதிக தூர்கள் கட்டி, ஒரே நேரத்தில் கதிர் வெளி வந்து, பதரில்லாத மணிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றுகிறது என்பதை விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக வயதான நாற்றுக்களால் மகசூல் குறைகிறது.


காற்று அவசியம்


நீரில் மிகக்குறைந்த அளவே காற்று உள்ளது. முளைக்கும் நெல் விதை உயிர்ப்புப் பெற காற்று அவசியம். நீரின் அதிக ஆழத்தில் விதைகள் கிடந்தால் விதைக்கரு மெதுவாக முளைத்து, வலுவற்ற தண்டுடன் வளரும். எனவே விதைத்த பின்பு அளவான தண்ணீர் நிறுத்தினால் திடமான நாற்றுகள் உருவாகும்.



மேலாக நடவு


அதிக ஆழத்தில் நடவு வயலில் நாற்றுக்களை நடுவதால் தூர் வெடிப்பது 10 நாட்களுக்கும் மேல் அதிகமாகிறது. மேலாக நடவு செய்வதால் விரைவில் முதல் நிலை தூர் உருவாகி புதிய தூர்கள் வெடித்து, பயிர் பச்சை கட்டி வளர ஏதுவாகிறது.


தகவல் வெளியீடு


இவ்வாறு பல்வேறு நுணுக்கங்களைக் கடைப்பிடித்து, வாளிப்பான, வீரியமான, பட்டையான – நாற்றுக்களை உற்பத்தி செய்து, நடவு வயலில் சிறப்பான பயிரைக் காணலாம் அதன் மூலம் கூடுதல் மகசூல் பெற்றுப் பலனடையலாம். இவ்வாறு கோபி வேளாண்மை உதவி இயக்குநர், வே.ஜீவதயாளன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை அரசு உத்தரவாதக் கடன்!!


எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த 5 குறிப்புகள்!!


இயந்திர வரிசை நெல் நடவு சாகுபடி- களைகளைக் கட்டுப்படுத்த கோனோவீடர் பயன்பாடு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

 

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post