2020-ம் ஆண்டில்
ரூ.1.92 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு; விவசாயிகள் பெற்ற இழப்பீடு ரூ.9,570 கோடி:
2019-யை விட 60% குறைவு!!
விவசாயிகளின்
பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த
2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இது கடந்த
2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும். 2019-20ம் ஆண்டில் ரூ.27,398 கோடி இழப்பீடாக
விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது அதாவது கடந்த ஆண்டில்
பெரும்பாலும் பயிர் இழப்பு நடக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின்
பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த
2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இது கடந்த
2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும். 2019-20ம் ஆண்டில் ரூ.27,398 கோடி இழப்பீடாக
விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது அதாவது கடந்த ஆண்டில்
பெரும்பாலும் பயிர் இழப்பு நடக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கடந்த
ஆண்டில் விசாயிகள் தரப்பில் ரூ.1.93 லட்சம் கோடி காப்பீடாக காப்பீடு நிறுவனங்களுக்குச்
செலுத்தப்பட்டுஅதில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய
ரூ.1.84 லட்சம் கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு லாபமாகச் சென்றுள்ளன.
மத்திய வேளாண்துறை
அமைச்சகம் அதிகாரிகள் கூறுகையில் “ கடந்த 2020-21ம் ஆண்டில் நாட்டில் பெரும்பாலும்
பயிர் இழப்பு எங்கும் ஏற்படாத காரணத்தால்தான் மிகக்குறைவாக இழப்பீடு விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டது. 2019-20 ஆண்டில் வழங்கப்பட்ட இழப்பீட்டைவிட கடந்த ஆண்டு வழங்கப்பட்டது
60 சதவீதம் குறைவு” எனத் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.3,602கோடியும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ரூ.1,232
கோடியும், ஹரியானாவில் ரூ.1,112.80 கோடியும் கடந்த 2020-21ம்ஆண்டில் பயிர் காப்பீடு
இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த
2019-20ம் ஆண்டில் 501 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் 6.13 கோடி விவசாயிகளால் ரூ.2 லட்சத்து19ஆயிரத்து
226 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதில் கரீப் சீசனில் ரூ.21,496 கோடியும் ராபி
பருவத்தில் ரூ.5,902 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டது.
2019-20ம் ஆண்டில்
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.6,757 கோடியும், அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச
விவசாயிகளுக்கு ரூ.5992 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,921 கோடியும் வழங்கப்பட்டது.
2019-20ம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீடு ஏறக்குறைய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இன்னும்ரூ.1200
கோடி வழங்கப்பட உள்ளது அது விரைவில் வழங்கப்பட்டுவிடும் எனஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2020-21ம்ஆண்டில் இதுவரை 6,845 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் பண்ணையம் அமைத்து லாபம் பெறுவது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...