நெல் சாகுபடி
செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர்க்கு ரூ.465/- பீரிமியமாக செலுத்தி பயிர் காப்பீடு
செய்ய அழைப்பு!!
உழவர் திரள்
பரவலாக்கம் வயல் விழா
புதுக்கோட்டை
மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திரள் பரவலாக்கம்
வயல் விழா மேலூர் கிராமத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை
தலைமையிலும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர்
(பயிர் காப்பீடு) எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இயற்கை உரங்களை
பயன்படுத்தி சாகுபடி
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போது உள்ள நவீன வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு பெருமளவிலான இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு மண்வளத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியர்களையும் நான் கருத்தில் கொண்டு சாகுபடி மேற்கொண்டு பயனடைய விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
ஏக்கர் ஒன்றுக்கு
ரூ.465/- பீரிமியம்
வேளாண்மை உதவி
இயக்குநர் (பயிர் காப்பீடு) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி
செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளிலிருந்து
வாழ்வாதாரத்தையும், வருவாய் இழப்பையும் சரி செய்து கொள்ள புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு
வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆகியவற்றில்
ஏதாவது ஓன்றில் 15.11.2021 க்குள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.465/- பீரிமியமாக செலுத்தி பயனடைய
கேட்டுக்கொண்டார்.
அன்னவாசல் வேளாண்மை
உதவி இயக்குநர் அ.பழனியப்பா, வேளாண்மை – உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும்
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் நெல்
வரப்பில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மண்வளத்தை
காக்க இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் அவசியம், பயிர் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட
தொழல்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
உதவி தொழில்நுட்ப
மேலாளர் எஸ் நவாப் ராஜா உழவன் செயலியை பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளிடம்
விளக்கி கூறினார். முன்னதாக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் வேளாண்மை மற்றும் உழவர்
நலத்துறையின் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சியினை பார்வையிட்டார் அதன் பின் வேளாண்
திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு
ஊக்கத்தொகை
நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழில்நுட்பக் கையேடு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கர், அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப
மேலாளர் க.தேவி நன்றி கூறினார். கண்காட்சி ஏற்பாடுகளை இராமநாதன் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி
திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தார்.
மேலும் படிக்க....
நெல் – விதைப்பண்ணைகள் அமைத்து கூடுதல் இலாபம் பெற வேளாண்துறை அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...