மழை காலத்திற்கு பின் நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!

 


மழை காலத்திற்கு பின் நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்குநர் ஆலோசனை


மழை காலத்திற்கு பின் நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழிநுட்பங்கள் பற்றி புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சுபா சாந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கி சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

 


தண்ணீரில் தேங்கியுள்ள நெற்பயிர்கள் பிராணவாயு கிடைக்காமல் வேர்களின் சுவாசம் முற்றிலும் பாதிக்கப்படும். பிராணவாயு கிடைக்காமல் போனதால் அதனைச் சார்ந்த நுண்ணுயிர்களின் செயல்பாடும் குறைந்தோ அல்லது நின்று விடும். 


எனவே இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மீண்டும் வெப்பம்மடைய அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் இந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாகச்சத்து மற்றும் தாமிர சத்துக்கள் பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைவதால் அவைகளின் பற்றாக்குறை பயிருக்கு ஏற்படும். 



அதனால் பயிரின் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து விடும். மழை நீர் வடியும் போது அதனுடன் சேர்ந்து மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகளின் கரைதிரன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும். வெப்ப நிலையில் அங்கக பொருட்கள் உருமாற்றம் ஆவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு தழைச்சத்து பற்றாக்குறை ஏற்ப்பட்டு பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். 


மேலும், மண்ணில் உள்ள இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்து குறைந்து இலைகளில் விகிதாச்சரம் பாதிக்கப்படுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

 

மாங்கனீசு சத்து பற்றாக்குறைவினால் இலைப்புள்ளி நோய் உண்டாகும். இவற்றை நிவர்த்தி செய்ய தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் வேர்களுக்கு காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 



நீர் வடிந்த உடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இதனுடன் 18 கிலோ மீயுரேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும். இலை வழி உரமாக அளிக்க வேண்டுமானால் 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 


அல்லது 4 கிலோ டி.ஏ.பி. உடன் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊர வைத்திருந்து மறுநாள் காலை நன்றாக வடிகட்டி தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து 190 லிட்டர் தண்ணிரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என குன்றாண்டார்கோவில் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சுபா சாந்தி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!


விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை அரசு உத்தரவாதக் கடன்!!


இயந்திர வரிசை நெல் நடவு சாகுபடி- களைகளைக் கட்டுப்படுத்த கோனோவீடர் பயன்பாடு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments