நெல் பயிரியில் தத்துப் பூச்சிகள் தாக்குதல் மற்றும் சேத அறிகுறிகள்! பயிரை பாதுகாப்பது பற்றிய முழு விளக்கம்!!

 


நெல் பயிரியில் தத்துப் பூச்சிகள் தாக்குதல் மற்றும் சேத அறிகுறிகள்! பயிரை பாதுகாப்பது பற்றிய முழு விளக்கம்!!


தத்துப் பூச்சிகள்


பச்சைத் தத்துப்பூச்சியானது வெப்பம் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் உள்ள காலங்களிலும், மழைக் காலங்களிலும் அதிகமாகக் காணப்படும்.


சேத அறிகுறிகள்


1. இளம் பூச்சிகளும், வளர்ச்சியடைந்த தாய்ப்பூச்சிகளும் இலைகளிலிருந்து சாற்றினை உறிஞ்சுகின்றன.



2. இளம் தோகைகள் மஞ்சள் நிறமாகிப் பின்னர் பழுப்பு நிறமடைந்துகாய்ந்துவிடும்.பயிர்களின் வளர்ச்சியானது பாதிக்கப்படும்.


3. இப்பூச்சியானது “துங்ரோ மற்றும் மஞ்சள் குட்டை போன்றவைரஸ் நோயினைப் பரப்புகிறது. பாதிக்கப்பட்ட பயிர்களின் இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சுநிறமாக இலையின் நுனியிலிருந்து கீழ்நோக்கி மாறத் தொடங்கும்.


4. இந்நோயினால் இளம் பயிர்களே அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன.


5. பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சியடையாமல் குட்டையாக இருக்கும். இளம் பயிர்களை இந்நோய் தாக்கினால் மகசூல் பாதிக்கப்படும்.



வாழ்க்கை பருவம்


1. இளம் பூச்சிகள் வெளிறிய பச்சை நிறத்திலும், வளர்ச்சியடைந்த பூச்சிகள் அடர் பச்சை நிறத்திலும் இருக்கும்.


2. வளர்ச்சியடைந்த பூச்சிகளின் இறக்கைகளின் மேல் கறுப்புநிறப்புள்ளிகள் காணப்படும்.


பொருளாதார சேத நிலை


1. தூர் வெடிக்கும் பருவத்தில் 1 குத்துக்கு 5 பூச்சிகள் (அல்லது)


2. பூ வெளிவரும் பருவத்தில் 1 குத்துக்கு 10 பூச்சிகள் (அல்லது)


3. துங்ரோ நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் 1 குத்துக்கு 2 பூச்சிகள்


மேலாண்மை முறைகள்


1. தூங்ரோ நோய் தாக்கப்பட்ட நெற்பயிரை வேருடன் பிடுங்கிஅழித்துவிட வேண்டும்.


2. பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமான அளவு தழைச்சத்து உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


3. விளக்குப் பொறி அமைத்து பூச்சிகளின் எண்ணிக்கையை கண்டறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கவேண்டும்.


4. ஒரு ஹெக்டேருக்கு இமிடாகுளோபிரிட் (17.8 எஸ்எல்) 100-125மிலி (அல்லது) தயமீதாக்சம் (25 டபிள்யூஜி )100 கிராம் என்றஅளவிலும் ஒட்டும் திரவம் 200 மிலி கலந்து தெளிக்க வேண்டும்.



தகவல் வெளியீடு


இத்தகவலை, இராமநாதபுரம், விதைச்சான்று (ம) அங்ககச் சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்தார்.


மேலும் படிக்க....


நெல் வரப்பில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து கூடுதல் லாபம் ஈட்ட வழிமுறைகள்!!


நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த எளிய வழிமுறை!!


நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments