தமிழகத்திற்கு 2022-23ம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் கடன் மதிப்பீடு ரூ.4.13 லட்சம் கோடி!!



தமிழகத்திற்கு 2022-23ம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் கடன் மதிப்பீடு ரூ.4.13 லட்சம் கோடி!!


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்திருக்கும் தமிழ்நாட்டுக்கான “வளம் சார்ந்த மாநில அறிக்கை 2022-23-ஐ தமிழக அரசின் நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் நடைபெற்ற மாநில கடன் கருத்தரங்கில் வெளியிட்டார். 


இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயல் அலுவலருமான ஷாந்தி லால் ஜெயின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.கே ஸ்ரீவஸ்தவா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ் எம் என் சுவாமி, மூத்த அரசு அதிகாரிகள் மூத்த வங்கியாளர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வேளாண், கால்நடை மற்றும் மீன்வளத் துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 



முன்னுரிமை கடன் பிரிவின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கடன் திட்டமிடுதலுக்கு உதவும் வகையில் மாவட்ட வாரியாக கடன் மதிப்பீட்டு திட்டங்களை நபார்டு கடந்த பல்லாண்டுகளாக தயாரித்து வருகிறது. 



தமிழ் நாட்டின் 2022-23ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைத் துறை கடன் ரூ. 4.13 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நபார்டு தமிழக மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் தி. வெங்கடகிருஷ்ணா தெரிவித்தார். 


இது 2021-22ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டை விட (ரூ. 3.43 லட்சம் கோடி) 20% அதிகமாகும். இதில், விவசாயத் துறைக்கு கடன் ரூ.1.43 லட்சம் கோடியும் (44%), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 1.31 லட்சம் கோடியும் (32%), இதர துறைகளுக்கு ரூ. 0.99 லட்சம் கோடியும் (24%) அடங்கும். இவற்றை தவிர, பல துறைகளில் உள்ள உள்கட்டமைப்பு தேவைகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 


கிராமப்புற உள்கட்டமைப்புக்கு நிதி வழங்குதலில் நபார்டு வங்கியின் பங்களிப்பையும், மாநிலத்தில் உள்ள மற்ற வங்கிகள் அதிகப்படியான கடன் வழங்கியதையும் பாராட்டிய நிதி அமைச்சர் சமுதாயத்தில் உள்ள அமைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் நுண்கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 



தமிழ் நாட்டில் நபார்டு வங்கி, 2020-21 ம் ஆண்டில் ரூ. 27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் ரூ. 40,000 கோடி அளவிற்கான கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, தமிழ் நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ் நாடு மாநில கூட்டுறவு வங்கி, தமிழ் நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, தங்களின் சேவைகளுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.


மேலும் படிக்க....


உரம் தொடர்பான தகவல்களை பெற மற்றும் புகார்களை கூற மாநில அளவிலான உதவி மையம்!!


வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!!


PMFBY: விவசாயிகளின் பிரீமியம் க்ளைம் குறித்து ஒன்றிய அரசின் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments