வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!!

 


வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!!


நமது நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களின் உயர்வும், தாழ்வும் வானிலை பொறுத்தே அமையும். நமது முன்னோர்கள் காற்றின் திசை, வேகம், பருவ மழை (Monsoon) தொடங்குவதற்கு முன்பே சிறப்பாக கணித்து பயிர்களையும் வேளாண் பணிகளையும் தேர்வு செய்தனர்.


நவீன வாழ்க்கையின் மீதான மனிதனின் அதிகப்படியான ஆசையினால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாகவும், காடுகளை அழித்ததால் காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வேளாண் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டன. விவசாயிகளுக்கும் மழை பொழிவு, குளிர், வறட்சி போன்ற காரணிகளை அறிந்து கொள்ள முடியவில்லை.


வானிலை முன்னறிவிப்பு உணவு உற்பத்தியில் ஒரு நாடு தன்னிறைவு அடைவதற்கு அங்கு நிலவும் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது. பருவம் தவறி பெய்யும் மழை,வறட்சி, புயல், உறைபனி போன்றவற்றாலும் விவசாயத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் இழப்புகளை தவிர்ப்பதற்கு வானிலை முன்னறிவிப்பு மிகவும் அவசியமாகிறது.


இது இன்றோ, நேற்றோ வந்ததில்லை அக்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வானிலையை துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் விவசாய மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு பலவித பயிற்சிகளை வழங்குகிறது.


வேளாண் வானிலை


வேளாண் வானிலை என்ற பிரிவின் மூலம் வாரத்தில் செவ்வாய் ,வெள்ளிக் கிழமை வட்டார வாரியான வானிலை முன்னறிவிப்பு வழங்குகிறது. இதை குறுஞ்செய்தி, தொலைபேசி மூலம் தவறாமல் வழங்கி கொண்டிருக்கிறது. இந்த தகவல்கள் விதைப்பு முதல் அறுவடை வரை பெரும் உதவியாக உள்ளது என்கின்றனர்.


விவசாயிகள். இதற்கான முழு முயற்சியில் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.


வானிலை சார்ந்த விழிப்புணர்வு


அருண்குமார், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண் வானிலை பிரிவு: விவசாயம் பெரும்பாலும் பருவ மழையை பொறுத்தே உள்ளது. அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள தானியங்கி வானிலை நிலையம், வானிலை ஆய்வுக் கூடம் மூலம் மழை அளவு, காற்றின் ஈரப்பதம் (Moisture), காற்றின் வேகம், திசை, சூரிய கதிர்வீச்சு அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை, மண்ணின் வெப்பநிலை, நீர் ஆவியாதல் ஆகிய வானிலை காரணிகள் தினந்தோறும் கணக்கிடப்படுகிறது.


விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த விழிப்புணர்வை பயிற்சிகள், ஆலோசனை கூட்டங்கள் மூலம் வழங்கி வருகிறோம். சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறோம். வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்றவாறு நாம் விவசாய பணிகளை மேற்கொண்டால் பெரும் இழப்பைத் தவிர்க்கலாம். 


இந்திய வானிலைத் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 'மேகதுாது' 'தாமினி' போன்ற செயலிகள் மூலமாகவும் வட்டார வானிலை முன்னறிவிப்புகளை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பார்த்து தெரிந்து கொள்ளலாம், என்றார்.


பயனுள்ள வானிலை முன்னறிவிப்பு


வாசுகி, விவசாயி, செட்டிகுறிச்சி: வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருந்து வாரத்திற்கு 2 முறை வானிலை முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மழை, காற்று வேகம் எப்படி இருக்கும் எனவும், விவசாயத்திற்கு தேவையான பொதுவான ஆலோசனைகள், ஒவ்வொரு பயிருக்கும் விதைப்பு முதல், அறுவடை (Harvest) வரை, எப்பொழுது செய்ய வேண்டும், பூச்சி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும், கால்நடைகளை எவ்வாறு காலநிலைக்கு ஏற்றவாறு, பராமரிக்க வேண்டும் என்ற வானிலை முன்னிருப்பு தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.


இந்த வானிலை முன்னறிவிப்புகளை தவறாமல் கடைபிடித்தால் மழைக்கு முன், உளுந்து, பாசி போன்ற பயிர்களை அறுவடை செய்து இழப்பைத் தவிர்க்க முடிந்தது.


மேலும் படிக்க....


PMFBY: விவசாயிகளின் பிரீமியம் க்ளைம் குறித்து ஒன்றிய அரசின் தகவல்!!


M Kisan வங்கி மூழ்கினால் ரூ.5 லட்சம் கிடைக்கும் என உத்தரவாதம்!


இன்றைய வானிலை (09.12.2021 முதல் 12.12.2021 வரை) நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments