இன்றைய வானிலை (09.12.2021 முதல் 12.12.2021 வரை) நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!!


இன்றைய வானிலை (09.12.2021 முதல் 12.12.2021 வரை) நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!!


சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன் – வானிலை பதிவாளர் கூறியதாவது.


வரும் நான்கு நாட்களுக்கு (09.12.2021 முதல் 12.12.2021 வரை)


சேலம் மாவட்டத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29oCஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23oC ஆகவும்இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 6 முதல் 8 கி.மீ ஆக வீசக்கூடும்.



வரும் வாரங்களில் இலேசான மழைக்கான வாய்ப்புள்ளதால் பூச்சி கொல்லி அல்லது களைக்கொல்லி மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும்.


தற்பொழுது பெய்த மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சோளம், உளுந்து, பாசிபயிறு, நிலக்கடலை, மற்றும் பயிறு வகை பயிர்களை பயிர் செய்யலாம்.


உழவர்கள் அனைவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வேளாண் சார்ந்த செயலிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (த.வே.ப.கஏ.ஏ.எஸ், மேக்தூட்&தாமினி).


தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் தாக்கம் தென்பட்டால் கார்பென்டாசிம் 0.1 சதவீதம் அல்லது ப்ராபிகனோசோல் 0.1% அல்லது மான்கோசெப் 0.25% மற்றும் டீபோல் (ஒட்டும் திரவம்) கலந்து 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.



கத்தரிக்காய் – தண்டு மற்றும் காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த : பாதிக்கப்பட் டதண்டு மற்றும் காய்களைக் அகற்றி அழிக்கவும். இனக்கவர்ச்சி பொறி @12/எக்டர் நிறுவவும். வேப்ப விதைசாறு (NSKE) 5 % அல்லது நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் அசாடிராக்டின் 1.0% இசி @ 3.0 மிலி/லி அல்லது எமாமெக்டின்பென்சோயேட் 5% எஸ்ஜி @ 4 கிராம் / 10 லிட்டர் அல்லது ஃப்ளூபென்டியாமைடு 20 WDG @ 7.5 கிராம்/10 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.


மழைக்குப்பின் வெப்ப நிலை அதிகரிக்கும் சூழ்நிலையில் மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு `தையோகார்ப் 5 கிராம் அல்லது அசிபேட் 2 கிராம் தெளிக்கலாம்.



தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் உள்ள வயலில் நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். சூடோமோனாஸ்புலோசன்சஸ் -2.5 கிலோ கிராம் / ஹெக்டர் என்றளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும். தாக்குதல் அதிகமாக உள்ள வயலில் காப்பர் ஆக்சிகுளோரைடு 2 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


மேகமூட்டமான வானிலையுடன் அதிக ஈரப்பதம் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு சாதகமான நிலையை உருவாக்கக்கூடும். மஞ்சளில் இலைப்பேனை தடுக்க குயினல்போஸ் 0.025% போன்ற பூச்சிக் கொல்லிகளை தெளிக்கவும்.


நெல்லில் குலை நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேடாமிநோஸ்டரோபின் 5௦௦மி.லி. /எக்டர் அல்லது அசாக்ஸிஸ்டேராபின் 5௦௦மி.லி. / எக்டர் தெளிக்கவும்.


கால்நடைகளைப் பொறுத்தமட்டில்


மழைக் காலங்களில் மாடுகளில் கோமாரி நோய் பரவுவதை தடுக்க நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். சுண்ணாம்பு தூளை மாட்டுக் கொட்டகையை சுற்றி தூவ வேண்டும். நோயுள்ள பகுதிகளிலிருந்து புதிதாக கால்நடைகளை வாங்க கூடாது. வருடத்திற்கு இரு முறை கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.



கோழிப்பண்ணையின் ஆழ்கூளத்தில் ஈரப்பதம் காணப்பட்டால் சுண்ணாம்புத்தூளை தூவி கிளறி விடுவதன் மூலம் ஆழ்கூளத்தின் ஈரப்பதத்தை குறைப்பதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


நாட்டுக்கோழிகளை ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்க்கும் போது ஆழ்கூளம் (கடலைப்பொட்டு, நெல் உமி) போன்றவை நனைந்து கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்கூளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டால் சுண்ணாம்புத் தூளை தூவி கிளறி விடவேண்டும். இதனால் ஆழ்கூளத்தின் ஈரப்பதம் குறைவதுடன், சுண்ணாம்புத்தூள் கிருமி நாசினியாகவும் செயல்பட்டு கோழிகளில் நோய் பரவுவதை தடுக்கிறது.

 

மேலும் படிக்க....


PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி வெளியிடும் அரசு!


PMFBY: பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையை விவசாயிகளே அறியலாம்!!


இன்று முதல் 5ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


 

Post a Comment

0 Comments