கனமழையிலும்
செழித்து வளரும் நிலக்கடலை! கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சாயல்குடி கிரமத்தில் தொடர் மழையால் நிலக்கடலை பயிர்கள் அமோகமாக வளர்ந்து
வருவதால், விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சாயல்குடி அருகே தரைக்குடி,செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை,
பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், மேலக்கிடாரம்
போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில்,
சுமார்
1900 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே உள்ள பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி,
கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட, இம்மாவட்டத்தில் சுமார்
10ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின்
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. ஆகையால் இம்மாதத்தில், நிலக்கடலை
பயிரிடப்படும் விவசாய நிலங்களை சீரமைத்து, உழவு பணிகளை செய்து வந்தனர். 105 நாட்களுக்குள்
விளைச்சல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை கார்த்திகை மாதத்தில் பயிரிடப்படுவது வழக்கம்.
இதற்கு ஏதுவாக
நவம்பர் மாதம் முதல் பெய்து வரும் மழையால், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நிலக்கடலை
விதைகளை விதைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்மழை பெய்து
வருகிறது. இதனால் கடலாடி வட்டார பகுதிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பயிர்கள்
நன்றாக வளர்ந்துள்ளது.
பயிர்கள் நன்றாக
வளர்வதற்கும், வேர் வலுவாக இருக்கவும் அடி உரம் போன்ற உரங்கள் போடப்படுகிறது. விவசாயிகள்
ஆர்வத்துடன் களை எடுத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
கடலாடி வட்டார
வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி கூறும்போது, மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலாடி
பகுதியில் சுமார் 1900 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இப்பகுதியில்
அரசு பரிந்துரையின் பேரில் தரணி ரகம் கடலை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. கோ 7 மற்றும்
நாட்டு நிலக்கடலையும் பயிரிடப்பட்டுள்ளது.
களை எடுத்த
பின் தழைமணி சாம்பல் சத்து உரம், ஜிப்சம் உரத்தினை 45 நாளில் ஏக்கருக்கு 80 கிலோ என்ற
வகையில் இரண்டு முறை பயன்படுத்தலாம். உரமிட்ட பிறகு செடியின் அடிப்பகுதியை மண்ணை கொண்டு
மூடிவிட வேண்டும். இதனால் விளைச்சல் அதிகரிப்பதுடன், பருப்பு பெரியதாக இருக்கும் மேலும்
எண்ணெய் சத்து அதிகமாக பெறலாம்.
மேலும் படிக்க....
நிலக்கடலையில் விதை நேர்த்தி முறை எவ்வாறு கையாள்வது முழு விவிபரம் இதோ!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...