நிலக்கடலையில்
விதை நேர்த்தி முறை எவ்வாறு கையாள்வது முழு விவிபரம் இதோ!!
விருதுநகர் மாவட்டத்தில் கார்த்திகை மற்றும் மார்கழிப் பட்டங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகின்றது. நிலக்கடலையில் உயிர் உரம் மற்றும் பூஞ்சான உயிர்கொல்லி கொண்டு விதைநேர்த்தி செய்வதால் விதையின் மூலம் பரவும் நோய் மற்றும் பூஞ்சானங்கள் அழிக்கப்படுகிறது.
மேலும் உயிர் உர
விதை நேர்த்தியால் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று அதிக மகசூல் பெறலாம்.
ஒரு ஏக்கருக்குத் தரமான சான்று பெற்ற 80 கிலோ நிலக்கடலை விதையினை கீழ்க்கண்ட முறையில்
விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி
முறை
பூஞ்சான உயிர்கொல்லி
விதை நேர்த்தி முறை
ஒரு கிலோ நிலக்கடலை விதைப் பருப்புடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் பூஞ்சான உயிர்க்கொல்லியை 100 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து அதனை விதைப்பருப்பில் கலந்து பின்பு நிழலில் விதைகளை உலர்த்தி காய்ந்தபின் விதைக்க வேண்டும்.
நிலக்கடலையில் விதைநேர்த்தி
செய்யும் பொழுது அதன் மேற்புறத்தோல் உரிந்து போகாத வண்ணம் கவனமாக விதைநேர்த்தி செய்ய
வேண்டும் இல்லையேல் முளைப்பத்திறன் பாதிக்கப்படும்.
உயிர் உர விதை
நேர்த்தி
உயிர் உர விதை
நேர்த்திக்கு, விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான 240 கிராம் ரைசோபியம் உயிர்
உரத்தினை கலந்து பின் விதைக்க வேண்டும். மேலும் திரவ உயிர்உரம் கொண்டு விதை நேர்த்தி
செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்குத் தேவையான நிலக்கடலை விதைப் பருப்புடன் 50 மில்லி கலந்து
விதைப்பு செய்யலாம். முதலில் பூஞ்சான உயிர்க்கொல்லி விதை நேர்த்தி செய்த பின்பு உயிர்
உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பயன்கள்
பூஞ்சான உயிர்க்கொல்லி
கொண்டு விதை நேர்த்தி செய்தால் நிலக்கடலையில் இலைப்புள்ளி, வேரழுகல் போன்ற நோய்களுக்கான
எதிர்ப்பு சக்தி பெறப்பட்டு விதையின் நலம் பேணப்படுகிறது.
உயிர் உர விதை நேர்த்தி மூலம் ரைசோபியம் பாக்டீரியாவானது பயிரின் வேர் முடிச்சில் இருந்து பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை வளிமண்டலத்திலிருந்து கிரகித்துக் கொடுக்கிறது.
இதனால் பயிர்
செழித்து வளர்ந்து திரட்சியான மணிகள் பெறப்படுகின்றன. மேலும் தழைச் சத்து உரத்திற்கான
செலவு குறைக்கப்பட்டு மண்ணின் நலம் பேணப்பட்டு அதிக மகசூலும் கிடைக்கப்பெறுகிறது.
மேலும் விவசாயிகள்
தாங்கள் சேமித்து வைத்துள்ள விதைகளை விருதுநகர் விதைப் பரிசோதனை நிலையத்தில் முளைப்புத்திறன்
பரிசோதனை செய்தபின்பு இவ்விதை நேர்த்தி முறையினைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு
விதைப் பரிசோதனை அலுவலர் சி.சிங்கார லீனா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இராமசாமி மற்றும்
சாய்லெட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க....
உளுந்து பயிரில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...