சம்பா பட்டத்தில் நெல் பயிரினை தாக்கும் குலை நோய்!! முழுமையாக கட்டுப்படுத்தி அழிப்பது எப்படி?
புதுக்கோட்டை
மாவட்டத்தில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி 13 வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பருவத்தில் மத்திய காலம் மற்றும் நீண்ட கால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது உள்ள சீதோசண நிலை நோய் தாக்குதலுக்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கிறது.
குலை நோய்
பயிரின் அனைத்து
பகுதிகளும் பூசண தாக்குதலுக்கு உள்ளாகும் இதன் அறிகுறி இலையின் மேல் வெண்மை நிறத்தில்
இருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும்.
பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.
நோய் மேலாண்மை
1. தழை சத்தினை
மூன்று பங்காக பிரித்து பயிரின் வளர்ச்சி காலங்களில் இட வேண்டும்.
2. பேசில்லஸ் சப்டிலிஸ்
கொண்டு நாற்றுகளின் வேர் பகுதியினை 30 நிமிடம் ஊர வைத்து நட வேண்டும்.
3. பின்வரும் இரசாயன
மருந்துகளுள் ஏதேனும் ஒன்றைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
I) மேடாமிநோஸ்டரோபின்
200 மி.லி , ஏக்கருக்கு
II) அசோஸ்க்சிட்ரோபின்
23 ளுஊ 200 மி.லி , ஏக்கருக்கு
III) டிரைசைக்ளோசோல்
75 றுP 120 கிராம், ஏக்கருக்கு
IV) கார்பன்டாசிம்
12% ரூ மேன்கோசெப் 63 றுP – 300 கிராம்
V) டிரைசைக்ளோசோல்
18% ரூ மேன்கோசெப் 64 % றுP – 400 கிராம்
பாக்டீரியா
இலைக்கருகல் நோய்
இலை நீரில் நனைந்தது போன்றும், இலை நுனி அலை வடிவ ஓரத்துடன் மாறும். இலைகள் மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும் நுனியிலிருந்து இலைகள் காய்ந்த பின் சுருண்டும் காணப்படும்.
அதிகாலை
நேரங்களில் இளம் புள்ளிகள் அல்லது பனித்துளி திரவம் வடிதல் காணப்படும். இந்நோய் தாக்குதல்
அதிகமாகும்பட்சத்தில் 60% வர தானிய இழப்பு ஏற்படும். இந்நோய் காற்றில் ஈரப்பதம் அதிகம்
இருக்கும்போது வேகமாக பரவும்.
நோய் மேலாண்மை
1. அதிக தழைச்சத்து
இடுவதையும் கதிர் பருவத்தில் தழைச்சத்து அpளப்பதை தள்ளிப்போட வேண்டும்.
2. இந்நோய் தாக்கப்பட்ட
வயலில் அடுத்த வயலுக்கு தண்ணீர் வடிய கூடாது.
3. 3% வேப்பெண்ணெய்
அல்லது 5% வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும்.
4. மாட்டு சாணப்
கரைசல் 20 கிராம் மாட்டு சாணத்ததை 1 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.
5. ஸ்ட்ரெப்டோமைசின்
சல்பேட் ரூ டெட்ராசைக்கிலின் கலவை 300 கிராம் ரூ காப்பர் ஆக்சிகுளோரைடு 1.25 மப,எக்டர்
என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
6. காப்பர் ஹைட்ராக்சைடு
77 றுP 1.25 கிலோ , எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் கரிப்பூட்டை
நோய்
இந்நோய் விவசாயிகள்
மத்தியில் நெற்பழநோய் என்றழைக்கப்படும். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்கதில் பூசண
வித்துக்களால் சிறிய பந்து போன்று காட்சியளிக்கும். இது முதலில் ஆரஞ்சு நிறமாகவும்
பிறகு மஞ்சள் நிறமாகவும் அதன்பின் பச்சையம் கருப்பு நிறமாக உருமாறி காணப்படும் இப்பருவத்தில்
ஆட்கள் நடமாடும்போதும் மற்றும் காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.
நோய் மேலாண்மை
1. நோய் தாக்காத
விதைகளை பயன்படுத்துதல்
2. வரப்புகள் மற்றும்
சுற்று பகுதிகளை களை செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ளுதல்
3. கதிர் இலைப்பருவம்
மற்றும் பால் பருவங்களில் இந்நோய் தடுப்பதற்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 2.5, லிட்டர்
என்றளவில் தெளிக்கலாம்.
4. ப்ரோபிகோணசோல்
10 மிலி, லிட்டர் என்றளவில் தெளிக்கலாம்.
5. முன் எச்சரிக்கையாக
தூர்விடும் பருவம் மற்றும் பூக்கும் பருவங்களில் கார்பென்டசிம் மற்றும் தாமிரம் சார்ந்த
பூசணக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
தகவல்
முனைவர் கோ.நெல்சன்
நவமணிராஜ், முனைவர் த.செந்தில்குமார், முனைவர் அ.ப.சிவமுருகன் மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி,
வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.
மேலும் படிக்க....
நெற்பயரில் குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...