நெற்பயரில்
குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்!!
தற்பொழுது மதுரை
மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் நெற்பயிரானது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிரிடப்பட்டுள்ள
நெற்பபயிரில் குருத்துப்பூச்சியின் தாக்குதலானது தென்படுகிறது. இதன் தாக்குதலினால்
5-20 சதம் வரையில் சேதம் ஏற்படக்கூடும். முன் பட்டத்துப் பயிர்களைவிட, பின் பட்டத்துப்
பயிர்கள் அதிக அளவில் தாக்கப்படுகின்றன.
சேத அறிகுறிகள்
1. புழுக்கள் செடிகளின்
அடிப்பாகத்தில், தண்டைத் துளைத்து, உட்சென்று, உட்திசுக்களை உண்டு சேதப்படுத்துவதால்
நடுக்குருத்து வாடி மடிந்துவிடும்.
2. இளம் நாற்றை
புழு தாக்கும்போது, நடுக்குருத்து வாடி குருத்தழிவு அறிகுறி உண்டாகும்.
3. பூக்கும் பருவத்தில்
புழு தாக்கும்போது, நடுக்குருத்து, கதிர் காய்ந்து வெண்ணிறப் பதர்களாக வெளிவரும் இது
வெண்கதிர் எனப்படும்.
4. வாடிய குருத்து
அல்லது வெண் கதிரை மெதுவாக இழுத்தால் அது எளிதில் தனியாக வந்துவிடும்.
பூச்சிக் கட்டுப்பாடு
1. தழைச் சத்தை
தேவைக்கு அதிகமாகவோ அல்லது ஒரே தடவையாகவோ, இடக்கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக அளவு
தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
2. நாற்றுக்களை
நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
3. முட்டைக் குவியல்கள்
இலைகளின் நுனிப்பகுதியில், எளிதில் கண்டு கொள்ளக்கூடியவைகளாக இருப்பதால் அவற்றைச் சேகரித்து
அழித்துவிடலாம்.
4. நடுவதற்கு முன்னர்
நாற்றுகளின் நுனிப்பகுதியை கிள்ளி விடுவதன் மூலம் முட்டைக் குவியல்களை அழிக்கலாம்.
5. வாடிய நடுக்குருத்துகளை
அகற்றி அழித்துவிட வேண்டும்.
6. இரவு நேரங்களில்
விளக்குப் பொறி ஒரு எக்டருக்கு ஒன்று என்ற அளவில் பயிரிலிருந்து 20 அடி தூரத்தில் வைத்து
அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
7. டிரைக்கோகிரேம்மா
ஜப்பானிக்கம் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 30 மற்றும் 37 நாட்களில் மொத்தம்
இரண்டு முறை ஒரு தடவைக்கு @ 2 சிசி என்ற அளவில் இட வேண்டும்.
8. வேப்பங்கொட்டைச்
சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ, எக்டர் (அல்லது) வேப்பெண்ணை 3 சதவிகிதம் (ஒரு லிட்டர்
தண்ணீருக்கு 30 மிலி) ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.
9. பயிர் அறுவடைக்குப்
பின்னர் உடனயே உழவு செய்வதன் மூலம் பயிரின் தூர்ப்பகுதியில் இருக்கும் புழுக்களை அழிக்கலாம்.
10. சேத அளவு பொருளாதார சேத நிலையை தாண்டும் போது பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிமருந்தினை தெளிக்கவும்.
I) அசிபேட்
75% ளுP 1 கிலோ/எக்டர்
II) அசாடிராக்டின்
0.03% 1 லி/எக்டர்
III) கார்டாப்ஹைட்ரோகுளோரைட்
50% ளுP 1 கிலோ/எக்டர்
IV) பைப்ரோரினில்
80%றுழு 50-62.5 கிலோ/எக்டர்
V) புளுபென்டிமைட்
20%றுழு 125 கிராம்/எக்டர்
தகவல்
பா.உஷாராணி, உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) மற்றும் மு. ஹேமலதா, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியியல் நிலையம், மதுரை
மேலும் படிக்க....
நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தாயாரிப்பு மற்றும் வளமான நெல் நாற்றுக்கள் பெற வழிமுறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...