ஆடுகளை பாதிக்கும் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி? முழு விபரம் இதோ!!

 



ஆடுகளை பாதிக்கும் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி? முழு விபரம் இதோ!!


கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் பாதிப்புகள் பற்றி கால்நடை வளர்ப்போர்கள் சில தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். பருவநிலைக்கேற்ப கால்நடைகளில் சில ஓட்டுண்ணி பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.


இந்த ஓட்டுண்ணிகளில் அக ஒட்டுண்ணிகள் கால்நடைகளின் உடலின் உட்புறத்திலும், புற ஒட்டுண்ணிகள் கால்நடைகளின் உடலின் தோல் பகுதிகளில் காணப்படும்.



அக ஒட்டுண்ணிகளான தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், உருளைப்புழுக்கள் பெரும்பாலும் குடற்பகுதி, கல்லீரல், நுரையீரல் மற்றும் தசைப்பகுதிகளை தாக்குகின்றன. இதனால் கால்நடைகளில் கழிச்சல், சளி, தசைபாதிப்புகள் ஏற்படுகின்றது.


தசையில் உள்ள புழுக்களால் இறைச்சியின் தரம் குறைகிறது. புற ஒட்டுண்ணிகளான ஈக்கள், ஈ புழுக்கள், பேன்கள், தெள்ளுப்பு+ச்சிகள், மென் மற்றும் கடின உண்ணிகள், சிற்றுண்ணிகள் (சொரிப்பூச்சி) மூலம் தோலில் புண்கள், இரத்தசோகை, சொரிநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.



அக ஓட்டுண்ணிகளின் தாக்கம்


அக ஒட்டுண்ணிகளான தட்டை புழுக்கள் நத்தை மூலம் பரவி;, அவை உடலின் உள்ளே காணப்படும் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன மற்றும தாடை வீக்கம் ஏற்படும். நாடாப்புழுக்கள் சத்து குறைபாட்டையும் மற்றும் இரத்தசோகையையும் உண்டாக்கும்.


நாடாப்புழு வகையில் ஹைடாடிடு சிஸ்ட் மற்றும் சிஸ்டிசெர்கஸ் உள்ள இறைச்சி மதிப்பீடு குறைவாக காணப்படும். உருளைப்புழுக்கள் பெரிதும் கழிச்சலை ஏற்படுத்தும். ஆடுகள் உடல் மெலிவடைந்து சோர்வாகக் காணப்படும்.


புற ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் இரத்தம் குடிப்பவை. புரோட்டோசோவா எனும் ஒரு செல் இரத்த ஒட்டுண்ணிகள் மூலமாக பன்றிகளில் காய்ச்சல், மஞ்சள்காமாலை, நடுக்கம் மற்றும் கால்பகுதிகளில் வீக்கம் ஏற்படலாம். ஒட்டுண்ணிகள் பரவாமல் இருக்க ஆடுகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமாகும்.


ஆடுகளில் புற ஒட்டுண்ணிகள்


ஈக்கள் மற்றும் உண்ணிகள் கால்நடைகளுக்கு தொல்லைகள் ஏற்படுத்தி அவற்றின் உற்பத்தி திறனை பாதிக்கின்றன. அதனால் ஆடுகளும் சரியாக தீவனம் உட்கொள்ளாமல் இருக்கும்.


இறைச்சியின் எடை குறையும். மனிதர்களில் டைபாய்டு, காலரா மற்றும் அமீபியாசிஸ் போன்ற நோய்க்கிருமிகள் பரவுவதற்கும் இந்த ஈக்கள் தான் காரணமாகின்றன. பொதுவாக மாடு மற்றும் ஆடுகளில் மஸ்கா டொமெஸ்டிகா எனும் வீடு ஈக்கள் அதிகமாக காணப்படுகிறது.



இவை மட்டுமின்றி கடித்து இரத்தம் உண்ணும் ஈக்களான டபானஸ், ஸ்டோமாக்சிஸ் மற்றும் ஹெமடோபியா போன்ற ஒட்டுண்ணிகள் மாடுகளை பாதித்து தொல்லை தருகின்றன. இந்த வகை ஈக்கள் இரத்தம் உறிஞ்சுவதோடு மட்டுமின்றி புரோட்டோசோவா எனும் ஓரணு ஒட்டுண்ணிகளையும் பரப்புகின்றன.


பேன்கள், மென் உண்ணிகள், கடின உண்ணிகள், சிற்றுண்ணிகள் மற்றும் தெள்ளுப் பூச்சிகள் போன்ற பல வவையான புற ஒட்டுண்ணிகள் ஆடுகளையும், கோழிகளையும் தாக்குகின்றன.


பேன்களில் லினாகினதஸ், டமலினியா, ஹெமடோபைனஸ் போன்றவைகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றது. இவை உடம்பில் ஊர்வதால் அரிப்பு தாங்க முடியாமல் ஆடு அமைதியற்று காணப்படும் மற்றும் தீவனம் சரிவர உண்ணாது.


பொதுவாக உண்ணிகள் இரத்தம் உறிஞ்சுவதோடு மட்டுமின்றி புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளையும் பரப்புகின்றன. கடின உண்ணிகள் என்று சொல்லக்கூடிய இக்சோடெஸ், ஹிமாபைசலிஸ், பு+பைலஸ், ஹையலொமா போன்றவையும் இரத்தம் உறிஞ்சு, ஓரணு ஒட்டுண்ணிகளையும் இரத்தத்தில் பரவ செய்கின்றன.


நல்ல முறையில் பராமரிக்கும் பண்ணைகளில், சிற்றுண்ணிகளின் தாக்கம் மிகவும் குறைவாக காணப்படும். தெள்ளுப்பூச்சிகளின் தாக்கம் பொதுவாக வெப்பம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக காணப்படும்.


ஆடுகளில் உண்ணிகளை தடுக்கும் வழிமுறைகள்


உண்ணிகளைக் கட்டுப்படுத்த கால்நடைகளில் மருந்து குளியல் செய்தல் வேண்டும். டெல்டாமெத்ரின் அல்லது சைபெர்மெத்ரின் போன்ற மருந்துகளை 2மிலி எடுத்து 1லிட்டர் தண்ணீரில் கலந்து ஆடுகளை குளிப்பாட்ட வேண்டும்.



பிறகு 15 முதல் 20 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை மருந்து குளியல் செய்ய வேண்டும். ஆடு தொழுவத்தில்; 4மிலி மருந்தினை 1லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தினால் இரத்த ஓரணு ஒட்டுண்ணி நோய்களை கட்டுப்படுத்தலாம்.


மேலும் விவரங்களுக்கு


முனைவர் அ.லட்சுமிகாந்தன், மருத்துவர் ம.க.விஜயசாரதி, உதவிப் பேராசிரியர்கள், முனைவர் ர.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் (தொடர்புக்கு: 04372-234012-4225).

 

மேலும் படிக்க....


கறவை மாடுகளில் நச்சுயிரி நோய்களின் அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகள்!!


மாடுகளில் சினை பிடிக்காமை மற்றும் அதன் மேலாண்மை பற்றிய முழு தொகுப்பு!!


யாருக்கும் தெரியாத சில யுக்திகள்! கோழிப் பண்ணையில் லாபம் ஈட்டுவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

Post a Comment

0 Comments