யாருக்கும்
தெரியாத சில யுக்திகள்! கோழிப் பண்ணையில் லாபம் ஈட்டுவது எப்படி?
கோழிப்பண்ணைகளில்
லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளில் கிருமிநாசினித் தெளிப்பும் முக்கிய இடம் வகிக்கிறது.
கோழிப்பண்ணை
எனவே இந்தக்
கிருமி நாசினியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்துத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொள்வது
அவசியமான ஒன்று. கால்நடைகளிடத்தில் அதிக அன்பைக் கொட்ட விரும்பும் நபர்களுக்குக் கைகொடுக்கும்
லாபகரமானத் தொழில்களில் கோழிப்பண்ணையும் ஒன்று.
கோழிப்பண்ணை
பராமரிப்பு
இந்தத் தொழிலைப்
பொருத்தவரை, கோழிகள் வளர்ப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட இன்றியமையாதது பண்ணைப் பராமரிப்பு.
அந்தப் பராமரிப்பில் முக்கிய இடம் பிடிப்பது, கிருமி நாசினித் தெளிப்பு. ஏனெனில், கோழிப்
பண்ணை உள்ளப் பகுதிக்கு வரும்போதே மூக்கை மூடிக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் மூக்கைத்
துளைக்கும்.
கோழிப்பண்ணையை
வருமானம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கு, சரியானத் திட்டமிடல், பண்ணை பதிவேடுகள் ஆகியவை
மிகவும் அவசியம். அதுவும் தொகுதி முறையில் வளர்க்கப்படும் பண்ணைகளில் கோழிகளை விற்பனை
செய்தபின் கிருமிநாசினி தெளிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பண்ணையில் உள்ள
எச்சங்கள்
பண்ணையில் உள்ளக்
கோழிகளை வெளியேற்றியவுடன் பண்ணையின் உட்புறத்தில் சிலந்தி பூச்சிகள், கரையான் மற்றும்
கரப்பான்பூச்சிகளின் கூடு அவற்றின் எச்சங்களை நீக்க வேண்டும்.பரிந்துரைக்கபட்ட பூச்சி
நாசினியினைத் தெளிக்க வேண்டும்.
பார்மல்டீஹைடு
புகைமூட்டத்தைத் தூய்மை செய்வதற்கு முன்னும் பூச்சிநாசினியை 2-வது முறையாகத் தெளிக்க
வேண்டும்.எல்லா உபகரணங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். தானியங்கி தீவனம் மற்றும்
தண்ணீர் பாத்திரங்களை மேலே கட்டி தொங்க விட வேண்டும்.
2 கி.மீ. தொலைவில்
கோழி எச்சங்களைப் பண்ணையிலிருந்து குறைந்தது 2 கி.மீ. தொலைவில் கொண்டு சென்று அரசு விதிகளின் படி அழிக்க வேண்டும். தண்ணீர், தீவன உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து உலற வைக்க வேண்டும்.பூஞ்சைகள் தொற்று இருக்கக்கூடாது.
தண்ணீர் குழாய்களில் வளரும் கிருமிகளை நீக்க அவற்றை ஒவ்வொருமுறை கோழிகளை எடுத்த பின்பும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்ய முடியாவிடில் அதிக அளவில் குளோரினை (140 பிபிஎம்) பயன்படுத்த வேண்டும்.அந்த நீரை வெளியேற்றி கோழி கூட்டம் வருவதற்கு முன் சுத்தமான நீரை குழாயினுள் செலுத்த வேண்டும்.
கிருமிநாசினி
பெரியத் தீவன
தொட்டிகள், இணைப்பு குழாய்களைச் சுத்தம் செய்து எல்லா துவாரங்களையும் மூட வேண்டும்.
தேவையான இடங்களில் புகையூட்டி சுத்தம் செய்யலாம். குறிப்பிட்டக் கோழிகளை தாக்ககூடிய
நுண்ணுயிரிகளை அழிக்கும் சரியான கிருமிநாசினியை பயன்படுத்துவது அவசியம்.
ரத்த கழிச்சல்
எல்லா வகையான
கிருமி நாசினிகளும் ரத்த கழிச்சல் ஏற்படுத்தும் முட்டைகளை அழிக்காது. எனவே அவற்றைப்
பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு அழிக்க வேண்டும். கிருமிநாசினியை பயன்படுத்தும் போது
உடனுக்குடன் புகையூட்ட வேண்டும்.
வெப்பநிலை
தரை ஈரப்பதமாகவும்
கோழிப்பண்ணை அதிகபட்சமாக 65 சதவீதம் கொண்ட வெப்பநிலை இருக்கும் இடங்களில் புகையூட்டி
சுத்தம் செய்தல் வேண்டும்.
கோழிகள் திரும்பி
வரும்முன் பண்ணையில் உள்ள காற்றில் பார்மலின் அளவு 2 (பிபிஎம்) ஆக குறைந்து காற்றோட்ட
வசதி ஏற்படுத்த வேண்டும்.
தரையில் ஆல்கூலம்
பரப்பிய பிறகு, மறுமுறை புகையூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பண்ணையின் வெளிப்புறப்
பகுதியை சுத்தம் செய்ய மறக்கக்கூடாது. பண்ணையைச் சுற்றி கான்கிரிட்டால் அல்லது கூழாங்கற்களால்
ஆன பகுதிகளை அமைக்க வேண்டும். அவை பக்கவாட்டில் 3-10 அடி உயரம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாத
இடங்கள், புற்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக அவை சமமான,
நீரோட்ட வசதியுள்ள தரையாக இருக்க வேண்டியது முக்கியம்.
தகவல் வெளியீடு
பார்த்திபன்,
கால்நடை மருத்துவர்,
கோழியினத் துறை,
விருதுநகர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மிகக் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு முறை சிறந்தது!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...