மழையால் பயிர் பாதித்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்! வேளாண்துறை அறிவிப்பு!!


தமிழகத்தில் கனமழை காரணமாக பாதித்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மழையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.


சம்பா பருவ நெல் சாகுபடி


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி (Samba Season Paddy Crops) நடந்து வருகிறது. இப்பருவத்தில், 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் சேர்த்து, 30 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி மேற்கொள்ள வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.



மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவமழை (NorthEast Monsoon) பரவலாக பெய்து வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலுார், திருவண்ணாமலை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பலவகை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


இவற்றை கணக்கெடுக்கும் பணிகளை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால், கணக்கெடுப்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய செய்யும் முயற்சிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விடுமுறை முடிந்து நாளை மறுதினம் முதல், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம் அடையும்.


மேலும் படிக்க....


தரிசு நிலத்தில் நிலக்கடலை, சிறுதானியங்கள், பயறு வகைகள் பயிர் செய்ய ரூ. 22,800 மானியம்!!


PM KISAN 10 வது தவணை RS.2,000/- இந்த மாதமே வெளியீடு தவணை பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!


தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 


Post a Comment

0 Comments