தரிசு நிலத்தில்
நிலக்கடலை, சிறுதானியங்கள், பயறு வகைகள் பயிர் செய்ய ரூ. 22,800 மானியம்!!
தரிசுநில மேம்பாட்டு
திட்டம்
தரிசு நிலத்தை
சாகுபடி நிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும்
விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில்
தரிசு நிலங்கள்
சேலம் மாவட்டத்தில்
2021-22-ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களைச்
சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேளாண்மை மற்றும் உழவர்
நலத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 370 ஹெக்டேர் பரப்பளவுக்கு
மானியம் வழங்கப்படுகிறது.
எந்தப் பணிகளுக்கு
மானியம்?
குறிப்பாக,
நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், நிலத்தை சமன்செய்தல், உழவு பணிகள், விதை, உயிர்
உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கலவை விநியோகங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
சிறுதானியங்களுக்கான
மானியங்கள்
தரிசு நிலங்களில்
சிறுதானியங்கள் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.26.80 லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் பயிர் சாகுபடிக்கு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.13
ஆயிரத்து 400 வழங்கப்பட உள்ளது.
பயறு வகைகளுக்கான
மானியங்கள்
பயறு வகைகள்
120 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ.16.08 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளன.
பயறு வகைகள் பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 400 மானியமாக வழங்கப்படவுள்ளது.
நிலக்கடலைக்கான
மானியங்கள்
நிலக்கடலை
50 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.11.40 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.22 ஆயிரத்து 800 மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் தொடர்புக்கு
எனவே, தரிசு
நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்
உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
எப்படி விண்ணப்பிப்பது?
தரிசு நிலங்களில்
பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தை
அணுகி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் வெளியீடு
கார்மேகம்,
சேலம் மாவட்ட ஆட்சியர்.
மேலும் படிக்க....
தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...