7 ஆண்டுகள்
வரை 3% வட்டி மானியம்!! விவசாய தொழில் முனைவோர்களுக்கு செம வாய்ப்பு!! எப்படி விண்ணப்பிப்பது?
விவசாய தொழில்
முனைவோர்களுக்கு செம வாய்ப்பு
வேளாண்மை சம்மந்தமான
உட்கட்டமைப்புகளை மேம்படுத்திய மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியை உருவாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆறு ஆண்டுகளில் (2020-2021 முதல் 2025-2026)
வரை வங்கிகள் மூலம் ரூ. 1 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு
ரூ. 5,990 கோடி நிர்ணயம்
இதில் தமிழகத்தில்
மட்டும் ரூ. 5,990 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்
கீழ் ரூ. 2 கோடி வரை வழங்கப்படும். வேளாண்மை சம்மந்தமான உட்கட்டமைப்பு கடன்களுக்கு
7 ஆண்டுகள் வரை 3% வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்திரவாதம் 85% சதவீதம் தரப்படும்.
அனைத்துவிதமான
குழுக்களுக்கும் அனுமதி
இந்த திட்டத்தின்
கீழ் விவசாய தொழில் முனைவோர்களுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு
விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு
குழுக்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டமைப்புகள் மற்றும் புது நிறுவனங்கள்
தகுதியான நபர்கள் அல்லது அமைப்புகள் ஆகும்.
வணிக வங்கிகள்,
கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்,
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் மூலமாக கடன்கள் பெறலாம்.
அதிகபட்ச வட்டி
7% சதவீதம்
இந்த திட்டத்தின்
கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு அதிகபட்ச வட்டி 7% சதவீதம் ஆகும். பயனாளியின் பங்களிப்பு
மொத்த திட்ட மதிப்பில் குறைந்தபட்சம் 10% சதவீதம் ஆகா இருக்க வேண்டும்.
பல்வேறுவகையான
திட்ட செயல்பாடுகளுக்கு அனுமதி
இதில் இயற்க்கை
இடுபொருள்கள் தயாரித்தல், உயிர் ஊக்கிகள் தயாரித்தல், துல்லிய பண்ணையத்திற்கு தேவையான
உள்கட்டமைப்புகள், அடைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வேளாண் விளை பொருட்களை
சந்தைப்படுத்த தேவையான சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், சிப்பம்
கட்டும் கூடங்கள், முதனிலை மதிப்புக்கூட்டு நிலையங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள்,
மெழுகு பூசும் மையங்கள், மின்னணு வணிக மையங்கள் தகுதியான செயல்பாடுகள் ஆகும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விண்ணப்பிக்கும்
வழிமுறைகள்
மேலே குறிப்பிட்டுக்குள்ள
செயல்களுக்கு மற்ற அரசு திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து
பயன்பெறலாம். பயன் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in/
என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு
விண்ணப்பிக்கலாம், என தர்மபுரி மாவட்ட ஆட்சிதலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ. 3 முதல் 4 லட்சம் கடன்களைப் பெற SBI Kisan Credit Card!!
நெற் பயிரில் சான்று விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
தழை கொத்தமல்லி சாகுபடி செய்வது எப்படி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...