நெற் பயிரில் சான்று விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!


நெற்பயிரில் விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்திக்கு உதவுவதோடு அரசின் உற்பத்தி மானியம் பெற்று அதிக லாபம் பெறலாம் என விவசாயிகளுக்கு விதைச்சான்று உதவி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தி.கௌதமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : 



விவசாயிகள் நடப்பு நெல் சம்பா பருவத்தில் விதைப்பண்ணை அமைத்து தரமான பிற இரக கலப்பில்லாத இனத்தூய்மை பெற்ற விதைகளை உற்பத்தி செய்து வேளாண்மைத்துறைக்கு வழங்குவதன் மூலம் அரசின் உற்பத்தி மானியம் பெற்று விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். சான்று விதை உற்பத்திக்கு மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட, விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இரகங்களான ADT(R) 45, CO 51, TKM 13, VGD 1 மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ஆகிய இரகங்களில் அவரவர் பகுதிக்கு ஏற்ப தேர்வு செய்து விதைப்பண்ணை அமைக்கலாம். 


விதைப்பண்ணை அமைப்பது தொடர்பாக விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி ஆலோசனை பெற்று செயல்படலாம். நெல் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அமைக்கப்பட்ட விதைப்பண்ணையின் விபரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும். விதைப்பண்ணை வயல் நடவின் போது சான்று நிலையாக இருப்பின் 8 அடிக்கு 1 அடியும் ஆதார நிலையாக இருப்பின் 4 அடிக்கு 1 அடியும் பட்டம் விட்டு நடவு செய்யப்பட வேண்டும். 


விதைப்பண்ணை வயலுக்கு அருகே 3 மீட்டர் இடைவெளிக்கு இதர ரகம் சாகுபடி செய்யாமல் பயிர் விலக்கு தூரம் நடைபிடிக்க வேண்டும். நெல் விதைப்பண்ணையின் பூப்பருவத்தின்போது ஒரு முறையும், கதிர் முதிர்வின்போது ஒரு முறையும் விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கலவன் கணக்கீடு செய்யப்படும். பிற இரகங்கள் விதைப்பயிரில் கலந்து விடுவதே கலவன் ஆகும். 



கலவன்கள் விதைப்பயிரின் இனத்தூய்மையை பாதிக்கின்றன. எனவே கலவன்களை அகற்றி விதைப்பண்ணையை பராமரிக்க வேண்டும். 90 சதவீத மணிகள் வைக்கோல் நிறம் அடைந்தவுடன் அறுவடை செய்து நெல்லின் ஈரப்பதம் 13 சதவீதத்திற்குள் வரும்படி நன்கு காயவைக்க வேண்டும்.


நெல் குவியல் உரிய விதைச்சான்று அலுவலரால் ஆய்வு செய்யப்பட்ட பிறகு மூட்டைகளில் சீலிடப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு உரிய அறிக்கையுடன் அனுப்பப்படும். சுத்தி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு சுத்தம் செய்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்வு முடிவுகள் பெற்றிட அனுப்பப்படும்.


விதை மாதிரிகள் விதையின் அனைத்து பண்புகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற இரக கலவன்கள் இல்லாமல் தரமாக இருக்கும் பட்சத்தில் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய சான்றட்டைகள் பெறப்பட்டு பகுப்பாய்வு முடிவு பெற்ற நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் சான்று செய்யப்படும். 



விவசாயிகள் இவ்வாறு நெற்பயிரில் விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்திக்கு உதவுவதோடு அரசின் உற்பத்தி மானியம் பெற்று அதிக லாபமும் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ. 3 முதல் 4 லட்சம் கடன்களைப் பெற SBI Kisan Credit Card!!


சணல் அலங்காரப் பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!


மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......


வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

 

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post