மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!


காவிரி டெல்டா, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.


திருவாரூர் அருகே மாவூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் சேதமடைந்த குறுவைப் பயிர்களை, செவ்வாய்க்கிழமை அன்று பார்வையிட்ட பின்னர் அவர் பேசுகையில் : தமிழகத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. 



டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் மானிய திட்டத்தின்கீழ் கிணறுகள் அமைத்து இலவச மின் இணைப்புக்காக சுமார் 1,700 விவசாயிகள் 2018ம் ஆண்டு முதல் காத்திருக்கின்றனர். அவா்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.


முதல்வர் தலைமையிலான அரசால், நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ரூ.2,327 கோடி நிதியை, 2021-22 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. அதில், 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான தமிழக அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்கது.


மேலும், 2021-2022ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய 26.08.2021 அன்று தமிழக அரசால் 16.08.2021ஆம் நாளிட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை அரசாணை எண்.141-ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.



13.10.2021 வரை, 61871 விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்யப் பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரைக் காப்பீடு செய்துகொள்ளுமாறு முதல்வர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.


அதேநேரத்தில் பல கிராமங்களுக்கு இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரி டெல்டாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வுசெய்து விடுபட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன், மாவட்ட துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


மேலும் படிக்க....


உருளைக்கிழங்கு, தக்காளி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! நோய் மேலாண்மை!!


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு!!


ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து இரகங்கள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family.

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post