வாழை இலை மூலம் அதிக
வருவாய் வாழை விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருப்பு!!
நான்குனேரி
வட்டத்திற்குள்பட்ட விவசாயிகள் பலரும் இலை வருவாயை அதிகம் நம்பி வாழை சாகுபடியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி
மாவட்டத்தின் பணப்பயிர்களில் வாழை முக்கிய இடம் பெறுகிறது. தாமிரவருணி, சிற்றாறு வடிநிலக்
கோட்டப் பகுதிகளில் மட்டுமன்றி கிணற்றுப் பாசனத்திலும் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஏக்கரில்
வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
நேந்திரம்
(ஏத்தன்), நாட்டு வாழை, சக்கை, கதளி, ரஸ்தாளி, ரோபஸ்டா, பூவன், செவ்வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன.
மாவட்ட அளவில் கணக்கிட்டால் ஏத்தன் ரகமே அதிகம் பயிரிடப்படுகிறது.
அம்பாசமுத்திரம்,
களக்காடு, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏத்தன் ரகம் நன்கு விளைந்து பல இடங்களுக்கு
ஏற்றுமதியாகின்றன. இம் மாவட்டத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
கேரளத்திலிருந்து குவைத், சவூதி அரேபியா, கத்தார் உள்பட வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில்
ஏற்றுமதி செய்கின்றனர்.
ஏத்தன் ரகத்திற்கு
அடுத்ததாக ரோபஸ்டா, நாட்டு வாழை, சக்கை வாழை ரகங்களே அதிகம் பயிரிடப்படுகின்றன. நான்குனேரி
வட்டத்திற்குள்பட்ட மூலைக்கரைப்பட்டி, மருதகுளம், மூன்றடைப்பு, பொன்னாக்குடி, தோட்டாக்குடி
சுற்றுவட்டாரங்களில் சக்கை ரக வாழைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. காய்களைக் காட்டிலும்
இந்த ரகத்தில் இலையின் மூலம் கிடைக்கும் வருவாயை விவசாயிகள் அதிகம் நம்பியுள்ளனர்.
இது குறித்து
விவசாயி ஒருவர் கூறுகையில், இலை, பூ, காய், தண்டு, காய்ந்த வாழைநார் என வாழையின் மூலம்
பலவித பயன்கள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தில் ஏத்தன், சக்கை ரகம் போன்றவை மிகவும் அதிகமாக
பயிரிடப்படுகின்றன.
இரு மாதங்கள்
வரை இலையிலேயே வருவாய் பெறும் வாய்ப்பு உள்ளது. முகூர்த்த நாள்களில் ஒரு இலை ரூ.3 வரை
விற்பனையாகும். பலத்த காற்று, பருவம் தவறும் மழையால் வாழைக் குலைகள் திரட்சியாக வருவதில்லை.
இதனால் குறையும் வருவாயை வாழை இலைகள் வருவாய் ஈடு செய்வதால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள்
பகுதியில் இலை வருவாயை நம்பியே வாழையை சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்
அவர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக வாழையே அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், மொத்த வியாபாரிகள் அறுவடைக் காலங்களில் மிகவும் குறைந்த விலைக்கே வாழைக்காய்களை வாங்குகின்றனர். பின்னர், அவற்றை கிடங்குகளில் பதப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில் வாழைக்காய்களை
அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறவும், நிரந்தர விலையை உருவாக்கி விவசாயிகளைக்
காக்கவும் பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். தமிழக அரசு இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த
வேண்டும். மேலும், வாழை இலைகளையும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய சிறப்பு மையங்களை
உருவாக்க வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க....
மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!
உருளைக்கிழங்கு, தக்காளி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! நோய் மேலாண்மை!!
தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு முக.ஸ்டாலின் வெளியிட்டார்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Group
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் Group
2 Time to Tips Family.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...